தேசிய ரீதியில் மன்னாருக்கு 03 பதக்கங்கள்.....
தேசிய இலக்கிய விழாப்போட்டியில்- 2017- 2018 உள்ளக அலுவல்கள் வடமேல் அபிவிருத்தி மற்றும் கலாச்சார அலுவல்கள் அமைச்சு மற்றும் கலாச்சார அலுவல்கள் திணைக்களம் நடாத்திய போட்டியில்...05-03-2018 BMICH கொழும்பில் நடைபெற்ற விழாவில்வைத்து.
மன்னார் மாவட்டத்திற்கு மூன்று தங்கப்பதக்கங்கள் கிடைத்துள்ளது
மன்னார் தோட்டவெளி ஜோசப்வாஸ் நகரில் வசிக்கும் மனோகரன் கிஷோர் றொனிக்கா அவர்கள் தமிழ் குறுநாடகப்போட்டியில் பேதங்கள் மாறிட வேண்டும் 1ம் இடத்தினை பெற்றுள்ளார் இவர் மன்.தோட்டவெளி பாடசாலையின் மாணவியும் ஆவார்.
-------
இதே விருது விழாவில் மன்னார் புனித சவேரியார் பெண்கள் தேசிய கல்லூரியின் மாணவி அமல்றஜ் இம்மானுவலி நாட்டார் பாடல் போட்டியில் தேசிய ரீதியில் 01ம் இடத்தினையும் 2016ம் ஆண்டு இளைஞர்கள் சேவைகள் மன்றத்தினால் நடாத்தப்பட்ட தனிக்கிராமியபாடல் போட்டியில் 01ம் இடம்பெற்று தங்கப்பதக்கம் பெற்றுக்கொண்டமையும் குறிப்பிடத்தக்கத.
---------------
அரச அலுவலர்களுக்கான போட்டியில் சிறுகதைக்காக திருநாவுக்கரசு சர்மிளா அவர்களுக்கும் பதக்கம் கிடைத்தமை குறிப்பிடத்தக்கது.
பதக்கங்களைப்பெற்றுக்கொண்ட மூவருக்கும் நியூமன்னார் இணையக்குழுமம் சார்பாக பாராட்டி வாழ்த்துகின்றோம்.
பிந்திக்கிடைத்த தகவல்...V.KAJENTHIRAN

தேசிய ரீதியில் மன்னாருக்கு 03 பதக்கங்கள்.....
Reviewed by Author
on
May 07, 2018
Rating:

No comments:
Post a Comment