அண்மைய செய்திகள்

recent
-

மன்னாருக்கென தீ அணைப்பு சேவை இன்மையால் மக்கள் பெரும் பாதிப்பு சாள்ஸ் நிர்மலநாதன்MP



மன்னார் மாவட்டத்தில் திடீர் இடர்களின்போது ஏற்படும் தீயை கட்டுப்படுத்துவதற்கு மவட்டத்துகென ஒரு தீயணைப்பு சேவை இன்மையால் பெரும் அவலத்தை எதிர்கொள்வதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்
மன்னார் மாவட்டத்துக்கென்று ஒரு தீயணைப்பு சேவை இன்றுவரை கிடையாது எதனை ஏற்படுத்தித்தருமாறு நீண்டகாலமாக கோரிக்கை விடப்பட்டு இருந்தது .
அதற்க்கு அரசு சம்மதம் தெருவித்திருந்தபோதும் இதுவரை எந்த பணிகளும் இடம்பெறவில்லை.இதனான் மாவட்டத்தில் திடீர் இடர் ஏற்பாட்டால் பிரதேச செயலாளர் உஊடக இராணுவத்தினரையே நாடவேண்டிய நிலையியல் உள்ளனர்.இராணுவத்தினரிடமும் சாதாரண நீர்த்தாங்கிகளே உள்ளன.இதனால் மாவட்டத்தில் ஏற்படும் இடர்களை உடனடியாக கட்டுப்படுத்த முடிவதில்லை.இவாறே நேற்று அதிகாலை மின்னல் தாக்குதலில் தென்னையில் பரவிய தீயை அணைப்பதற்கு பகுதி மக்கள் உயரம் காரணமாக பெரும் சிரமத்தை எதிர் கொண்டனர் இருப்பினும் நீண்ட போராட்டத்தின் பின்பு தீ கட்டுப்பட்டுத்தப்பட்டது.

இதே போன்று கடந்த ஆண்டு இறுதியில் பனைமரங்கள் நிறைந்த பிரதேசத்தில் ஏற்பட்ட தீயை கட்டுப்படுத்தமுடியாது பெரும் சிரமத்தை எதிர்கொண்டு தீயை கட்டுப்படுத்தியவேளை அரும்பெரும் சொத்தான பனைமரங்கள் 200  ற்கும் மேற்பட்ட பனைமரங்கள் அழிவடைந்தன.
இதனை கருத்தில் கொண்டே கடந்த ஆண்டு தலைமை அமைச்சர் ஊடாக ஒரு தீயணைப்பு சேவையை கோரிய நிலையில் மாவட்ட செயலகம் ஊடாக அதற்கான செலவு மதீப்பீட்டு விபரம் பெறப்பட்டது இருப்பினும் அடுத்த கட்டத்துக்கு அது நகரவில்லை.

இவாறே முல்லைத்தீவு மாவட்டத்துக்கும் ஒரு தீயணைப்பு சேவை கிடையாது.கிளிநொச்சி மாவட்டத்தில் சந்தையில்  ஏற்பட்ட தீ விபத்தின் பின்பே அந்த மாவட்டத்தை திரும்பி பார்த்தனர்.இருப்பினும் இன்றுவரை அங்கும் தீயணைப்பு சேவை இல்லை.இனவே இந்த மாவட்டங்களிலும் இடர் நிகழ முன்பு உரிய திணைக்களங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மன்னாருக்கென தீ அணைப்பு சேவை இன்மையால் மக்கள் பெரும் பாதிப்பு சாள்ஸ் நிர்மலநாதன்MP Reviewed by Author on May 08, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.