இலங்கை தொழில் சந்தையில் 5 லட்சம் வெற்றிடங்கள் -
இலங்கையின் தொழில் சந்தையில் 5 லட்சம் வெற்றிடங்கள் காணப்படுவதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
இலங்கை புள்ளிவிபரத் திணைக்களத்தின் மனித வளம் தொடர்பான கேள்வி குறித்த கணக்கெடுப்பில் இது தெரியவந்துள்ளதுடன் தொழில் நிபுணத்துவ அடிப்படையிலான பிரதிபலன்களுக்கு அமைய இந்த வெற்றிடங்கள் ஏற்பட்டுள்ளன.
தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்துவது மற்றும் தொழிலை எதிர்பார்த்துள்ளோரின் எதிர்பார்ப்புகளுக்கு இடையில் பெரிய இடைவெளி காணப்படுகிறது.
சில தொழில்கள் குறித்து எவரும் அக்கறை காட்டுவதில்லை.
தொழில்களுக்கு தகுதியானவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளமை மற்றும் தொழில் தேவையுள்ள நபர்கள் தாம் எதிர்பார்க்கும் சம்பளம் இதற்கு பிரதான காரணமாக அமைந்துள்ளது என இலங்கை மத்திய வங்கியின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை தொழில் சந்தையில் 5 லட்சம் வெற்றிடங்கள் -
Reviewed by Author
on
May 02, 2018
Rating:

No comments:
Post a Comment