850 கொலைகளுக்கு காரணமான பயங்கரவாத குழு எடுத்த அதிரடி முடிவு -
குறித்த பயங்கரவாத குழுவானது பஸ்க் பிராந்திய விடுதலைக்காகவும் போராடி வந்தது. மட்டுமின்றி ஸ்பெயினின் அரசர் ஜுவான் கார்லோசையும் படுகொலை செய்ய முயற்சி மேற்கொண்டது.
தற்போது தங்களது 50 ஆண்டு கால ஆயுத போராட்டத்தை கைவிடுவதாகவும், தங்களின் ஆயுதங்களை ஒப்படைக்கவும் ETA என்ற அந்த குழு முடிவு செய்துள்ளதாக உள்ளூர் நாளேடு ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இனிமேல் தங்களது குழு எவ்வித கலவரத்தையும் முன்னெடுப்பதில்லை எனவும், கடந்த கால தவறுகளை இனி ஒருபோதும் தொடர்வதில்லை எனவும் வாக்குறுதி அளித்துள்ளது.
கடந்த ஆண்டு தங்களது ஆயுத போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவருவதாக அறிவித்த ETA பிரிவினைவாதக் குழுவானது மே மாதத்தில் தங்கள் குழுவை கலைப்பதாகவும் அறிவித்திருந்தது.
Euskadi Ta Askatasuna என்ற பிரிவினைவாத குழுவானது 1959 ஆம் ஆண்டு துவங்கப்பட்டு பஸ்க் பிராந்தியத்தில் ஆதிக்கம் செலுத்தியது.அரசியல் படுகொலைகள், வெடிகுண்டு தாக்குதல் உள்ளிட்ட கடும் நடவடிக்கைகளில் ETA அமைப்பு ஈவு இரக்கமின்றி செயல்பட்டது.
1959 தொடங்கி 2010 வரையான காலகட்டத்தில் அப்பாவி பொதுமக்கள் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் சுமார் 850 பேரை படுகொலை செய்துள்ளது.
ETA அமைப்பின் மிக கொடூரமான காலகட்டம் என 1980 கூறப்படுகிறது. இந்த ஆண்டில் மட்டும் 100-க்கும் அதிகமானோரை கொன்று குவித்தது குறிப்பிடத்தக்கது.
850 கொலைகளுக்கு காரணமான பயங்கரவாத குழு எடுத்த அதிரடி முடிவு -
Reviewed by Author
on
May 03, 2018
Rating:
No comments:
Post a Comment