மன்னாரில் இருந்து கொழும்பு நோக்கி நேற்று இரவு சென்ற அரச பயணிகள் பேரூந்தில் ஒரு தொகுதி முருங்கக்காய் மூடைகள்- பயணிகள் அசௌகரியம்-(படம்)
இலங்கை அரச போக்குவரத்துச் சேவையின் மன்னார் சாலையில் இருந்து கொழும்பு நோக்கி நேற்று செவ்வாய்க்கிழமை (1) இரவு 9.30 மணியளவில் கொழும்பு நோக்கி பயணித்த அரச பேரூந்தில் பயணிகள் ஆசனங்களில் அதிகளவான முருங்கக்காய் மூடைகள் ஏற்றிச் செல்லப்பட்டதாகவும், இதனால் குறித்த பேரூந்தில் பயணித்த மக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்துள்ளதாக பாதீக்கப்பட்ட பயணிகள் விசனம் தெரிவித்துள்ளனர்.
தலைமன்னாரில் இருந்து பயணிகளை ஏற்றி வரும் இலங்கை அரச போக்குவரத்துச் சேவையின் மன்னார் சாலைக்கான பேரூந்து மன்னார் அரச பேரூந்து தரிப்பிடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இரவு 9.30 மணிக்கு கொழும்பு நோக்கி செல்வது வழமை.
இந்த நிலையில் நேற்று செவ்வாய்க்கிழமை(1) இரவு தலைமன்னாரில் இருந்து (WP-NB-8927) எனும் இலக்கம் கொண்ட பேரூந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு வரும் வழியில் உள்ள கிராமங்களில் ஒரு தொகை முருங்கக்காய் மூடைகளையும் குறித்த பேரூந்தில் ஏற்றிக்கொண்டு மன்னார் சாலை நோக்கி குறித்த பேரூந்து வந்துள்ளது.
எனினும் குறித்த அரச பேரூந்தின் பின் கதவு முழுமையாக மூடப்பட்டு ஆசனம் உற்பட பின் பகுதியில் அதிகலவான முருங்கக்காய் மூடைகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது.
மேலும் முன் கதவிற்கும்,சாரதியின் ஆசனத்திற்கும் இடையிலும் ஒரு தொகுதி முருங்கக்காய் மூடைகள் ஏற்றப்பட்டிருந்தது.
இதனால் குறித்த பேரூந்தில் ஆசன பதிவுகளை மேற்கொண்ட மற்றும் தூர இடங்களுக்குச் செல்லும் பயணிகள் பல்வேறு அசெகரியங்களுக்கு முகம் கொடுத்ததாக பாதீக்கப்பட்ட பயணிகள் விசனம் தெரிவித்தனர்.
மேலும் தமது அசௌகரியங்கள் தொடர்பில் குறித்த பேரூந்தின் நடத்துனருடன் கதைத்த போது கடும் போக்கில் செயற்பட்டதாக பாதீக்கப்பட்ட பயணிகள் கவலை தெரிவித்தனர்.
பயணிகள் பயணிக்கின்ற பேரூந்துகளில் பயணிகள் இருக்க ஆசனம் வழங்கப்படாது ஆசன பகுதியில் இவ்வாறு பொதிகளை ஏற்றுவதை கண்டிக்க வேண்டும் என பயணிகள் தெரிவித்துள்ளனர்.
குறித்த முருங்கக்காய் மூடைகள் நேற்று செவ்வாய்க்கிழமை(1) இரவு தலைன்னாரில் இருந்து மன்னார் வரும் போது சில கிராமங்களில் குறித்த பேரூந்தின் நடத்துனரின் முழு ஒத்துழைப்போடும் ஏற்றப்பட்டதாக பாதீக்கப்பட்ட பயணிகள் விசனம் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

மன்னாரில் இருந்து கொழும்பு நோக்கி நேற்று இரவு சென்ற அரச பயணிகள் பேரூந்தில் ஒரு தொகுதி முருங்கக்காய் மூடைகள்- பயணிகள் அசௌகரியம்-(படம்)
Reviewed by Author
on
May 02, 2018
Rating:

No comments:
Post a Comment