கைக்குழந்தையுடன் கூடிய தமிழ்க்குடும்பத்தை காப்பாற்ற ஆஸ்ரேலியாவில் போராட்டம்!
கடந்த 2012_ம் ஆண்டு மற்றும் 2013_ம் ஆண்டுகளில் இலங்கையிலிருந்து ஒஸ்ரேலியாவுக்கு புகலிடம் கோரிவந்த கணேசலிங்கம் அவரது மனைவி பிரியா மற்றும் அவர்களது குழந்தைகள் ஆகியோரது புகலிடக்கோரிக்கைகள் குடிவரவுத்திணைக்களத்தினால் நிராகரிக்கப்பட்டு அவர்களுக்கு வழங்கப்பட்டிருந்த பிறிட்ஜிங்வீசா இரத்துச்செய்யப்பட்டிருந்தது.
வீசா இரத்தாகி மிகக்குறுகிய நேரத்தில் குயின்ஸ்லாந்து மாநிலத்தில் பிலொவிலா என்ற இடத்தில் குறித்த இந்தக்குடும்பத்தினர் வசித்த வீட்டிற்கு வந்த குடிவரவுத்துறை அதிகாரிகள் கணவன் கணேசலிங்கம் மனைவி பிரியா மற்றும் அவர்களது குழந்தைகள் ஆகியோர்களை கைதுசெய்து விக்ரோறியா மாநிலத்திற்கு அழைத்துவந்து மெல்பேர்ணில் உள்ள குடிவரவுத்தடுப்புமுகாமில் தடுத்துவைக்கப்பட்டிருந்தனர்.
இவ்வாறு தடுத்துவைக்கப்பட்டு ஓரிருவாரங்கள் கடந்தநிலையில் குறித்த இந்தக்குடும்பத்தினரை மேற்கு ஒஸ்ரேலிய மாநிலத்திற்கு அழைத்துச்செல்லப்பட்டு பேர்த்நகர விமானநிலையத்தில்வைத்து பலவந்தமாக இலங்கைக்கு நாடுகடத்துவதற்காக இந்தக்குடும்பத்தினர் விமானத்தில் ஏற்றப்பட்டார்கள்.
ஆனாலும் பிலொவிலாவாழ் ஒஸ்ரேலியச்சமூகத்தினராலும் சட்டவல்லுனர்களின் கடும்பிரயத்தனங்களாலும் இறுதிநேரத்தில் இக்குடும்பத்தினரது நாடுகடத்தல் உத்தரவு நிறுத்தப்பட்டு இவர்கள் விமானத்திலிருந்து இறக்கப்பட்டனர்.
இதன்பிற்பாடு இவர்கள் மீண்டும் மெல்பேர்ண் குடிவரவுத்தடுப்புமுகாமிற்கு அழைத்துவரப்பட்டு வெளித்தொடர்புகள் ஏதுமற்றநிலையில் தடத்துவைக்கப்பட்டுள்ளனர்
இதையடுத்து இவர்களது புகலிடக்கோரிக்கையை மறுபரிசீலனைக்கு உட்படுத்தக்கோரி சட்டத்தரணிகளால் சமஷ்ட்டி நீதிமன்றத்தில் வழக்குத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இதற்கமைவாக எதிர்வரும் 02_05_2018 பதன்கிழமையன்று இக்குடும்பத்தினர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.
எனவே அன்றையதினம் குறித்த இந்தக்குடும்பத்தினருக்கு ஆதரவாக குறித்த சமஷ்ட்டி நீதிமன்றத்திற்கு வெளியே மாபெரும் கவனயீர்ப்புப்போராட்டம் நடாத்துவதற்கு தமிழ் ஏதிலிகள் கழகம் முழுமையான ஏற்பாடுகளை முன்னெடுத்துவருகின்றது.
எனவே இந்த கவனயீர்ப்புப்போராட்டத்தில் அனைத்து தமிழ்மக்களும் கலந்துகொண்டு குறித்த இந்தக்குடும்பத்தினருக்கு ஆதரவாக குரலெழுப்புமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
இடம்: Flagstaff Gardens (Flagstaff station Melbourne)
காலம்: 8am Wednesday 2 May 2018
தமிழ் ஏதிலிகள் கழகம்.
ஆஸ்திரேலியா

Reviewed by Author
on
May 02, 2018
Rating:

No comments:
Post a Comment