தெங்கு பனம் பொருள் உற்பதியினரின் கோரிக்கை....சாள்ஸ் நிர்மலநாதன்MP
தெங்கு பனம் பொருள் உற்பதியினரின் கோரிக்கைக்கு அமைவாக திறக்கும் நேரத்தில் மாற்றம் அங்கு உற்பத்தி செயப்படும் பானங்களை அங்கு வைத்து அடைப்பதற்குரிய அனுமதி இன்று பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலனாதனின் கோரிக்கைக்கு அமைவாக நிதியமைச்சினால் வழங்கப்பட்டது.
உள்ளூர் உற்பத்தியை ஊக்குவிக்கும் நோக்குடன் வடமாகாண தெங்கு பனம் பொருள் உற்பதியினரின் கோரிக்கைக்கு அமைவாக கடந்த மாதம் பாராளுமன்றத்தில் ஒத்திவைப்பு பிரேரணையை கொண்டுவந்தேன் அதன் பிரகாரம் வட மாகாணத்தில் மன்னார் மாவட்டத்தில் நானாட்டான் பிரதேசத்திலும் யாழ் மாவட்டத்தில் கொடிகாமத்திலும் உள்ள தெங்கு பனம் பொருள் உற்பத்தி மையங்கள் திறக்கும் நேரத்தில் மாற்றம் மற்றும் அங்கு உற்பத்தி செய்யப்படும் பானங்களை அங்கு வைத்து அடைப்பதற்குரிய அனுமதியை பாரளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் கேட்டுகொண்டதற்கு இணங்க நேற்று நிதியமைச்சில் நடைபெற்ற கூட்டத்தில் நிதியமைச்சர் மங்கள சமரவீர அவரது செயலாளருக்கு பணித்தார்.
மிக விரைவில் இச் சுற்றுநிருபம் தெங்கு பனம் பொருள் உற்பத்தி நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.
தெங்கு பனம் பொருள் உற்பதியினரின் கோரிக்கை....சாள்ஸ் நிர்மலநாதன்MP
Reviewed by Author
on
May 12, 2018
Rating:

No comments:
Post a Comment