மன்னார் நகரப்பகுதியில் மதுப்பாவனையாளர்களின் அட்டகாசம்....பெண்கள் கவலை...
மன்னார் நகரப்பகுதியில் கடந்த சிலமாதங்களாக மதுப்பாவனையாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பினால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
குறிப்பாக பெண்களும் பாடசாலை மாணவிகளும் மாலைவகுப்புகளுக்கு செல்லும் மாணவிகளும் வேலைக்கு செல்லும் பெண்களும் பாதிப்புக்குள்ளாகின்றார்கள்.
- கடல் மார்க்கமாக வருகின்ற போதைப்பொருட்களின் பாவனையாலும்
- உள்ளூர் உற்பத்திகளினாலும்
- உடனே கிடைக்ககூடிய வகையில் மதுபானங்கள் உள்ளது (நகரப்பகுதியில் மதுபானசாலை உள்ளதாலும்) அதுவும் மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பிரதேசங்களில் குறிப்பாக பாடசாலை மாணவிகள் வேலை செல்லும் பெண்கள் கல்விநிலையங்கள் சென்று திரும்பும் வழிகளில் வீதிகளில் நிற்றல் இடைமறித்தல் பெண்கள் வேலை செய்யும் கடைகளின் முன்னாலும் மதுவருந்தியவர்களின் அதியுச்ச தொணியில் உரக்க கத்தி கேலியும் கிண்டலும் நையான்டியும் அநாகரிகமான செயற்பாடுகள் தகாத வார்த்தைப்பிரயோகங்கள் நகாரிகமற்ற செய்கைகள் அருகில் வந்து அச்சுறுத்துதல் இன்னும் சொல்லமுடியாத பல் துயரங்களை தினம் தினம் அனுபவித்து வருகின்றோம்.
இதில் இருந்து விடுதலை எப்போது கிடைக்கும்
ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமாய் ஒவ்வொரு ரூபத்தில் வரும் பிரச்சினைகள் அத்தனையும் வார்த்தைகளில் சொல்லிவிட முடியாது புரிந்து கொள்ளுங்கள்.
- நகர சபை உள்ளது
- பிரதேச சபை உள்ளது
- பிரதேச செயலகம் உள்ளது
- மாவட்ட செயலகம் உள்ளது
- பொலிஸ் நிலையம் உள்ளது
- உள்ளூராட்ச்சி மன்றம் உள்ளது
- எல்லாவற்றுக்கும் மேலாக வடமாகாண சபை உறுப்பினர்கள் வடமாகாண அமைச்சர்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் அமைச்சர்கள் இருந்தும் இவ்வாறான சிறிய பிரச்சினைகள் தீர்க்கப்படாமல் உள்ளது மிகவும் கவலைக்குரிய விடையமே அத்துடன் வெட்கக்கேடான செயலுமாகும்.
- தீர்வு எப்போது கிடைக்கும்,,,,
- பெண்கள் மனவுளைச்சலுக்குள்ளாகின்றார்கள்
- வேலைகளுக்கும் இதர செயற்பாடுகளையும் செய்யமுடியாதுள்ளது.
- பயத்துடன் பயணிக்கின்றோம்
- குடும்பத்தில் பிரச்சினைகள் ஏற்படுகின்றது
ஊர்காவற்படை போல் இவ்வாறான ஒழுககேடான செயற்பாடுகளை தடைசெய்யும் புதிய மன்னார் படை ஒன்றை உருவாக்கி செயற்படுத்தலாமே....கட்டுப்படுத்தலாமே.....தவறுகளை குறைக்க முன்வரலாமே.....
தீர்வுகள் கிடைக்காவிடில்..........
---மன்னார்விழி---
மன்னார் நகரப்பகுதியில் மதுப்பாவனையாளர்களின் அட்டகாசம்....பெண்கள் கவலை...
Reviewed by Author
on
May 09, 2018
Rating:

No comments:
Post a Comment