கண்பார்வை கூர்மையாகவும் தெளிவாகவும் இருக்க எள்ளு பூ -
எள் என்பது குழந்தைகள் முதல் பெரியவர்கள் அனைவரும் பயன்படுத்தி ஆரோக்கியமடைய கூடிய ஒரு வரப்பிரசாத தானியம்.
எள்ளிலிருந்து எடுக்கப்படும் நல்லெண்ணெய் முதல் வெறும் எள்ளை கொண்டு செய்யப்படும் துவையல் வரை எள்ளின் ஆரோக்கிய நன்மைகள் ஏராளமானவை.
எள் போலவே எள் செடியில் இருந்து மலரும் பூக்களும் மருத்துவ குணம் கொண்டுள்ளது . தூய வடிவமும் நிறமும் உடைய எள்ளு பூக்கள் சங்க காலம் முதல் கவிஞர்களுக்கு விருப்ப மலர். கூர்மையான பெண்களின் நாசியை எள்ளு பூ போன்றது என்று வர்ணிக்காத கவிஞரே இல்லை எனலாம்.
இந்த எள்ளு பூக்களை அப்படியே எடுத்து சாப்பிட்டு பின் மோர் அருந்தி வர கண்பார்வை பலப்படும் என்கின்றனர் வல்லுநர்கள்.
மங்கிய கண்பார்வை நீங்கி துல்லிய கண்பார்வை பெற நாம் செய்ய வேண்டியது எள் செடியின் பூக்களை ஒன்றன் பின் ஒன்றாக பற்களில் படாமல் விழுங்க வேண்டும். ஒரே முறையில் பல பூக்களை விழுங்குதல் தவறாகும். நாம் விழுங்கும் பூக்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப அத்தனை வருடங்களுக்கு கண்பார்வை தொடர்பான நோய்கள் வராது. பார்வை திறன் கூடும்.
கண்களில் பூ விழுதல் என்று சொல்ல படும் கேட்ராக்ட் பிரச்னைகளுக்கு தாய்ப்பாலுடன் பேரீச்சம்பழ கோட்டை மற்றும் மான் கொம்பில் சிறிது சேர்த்து அதோடு எள்ளு பூக்களையும் கசக்கி இழைத்து கண்களில் மை போல போட்டு வந்தால் பார்வை திறன் மேம்படும்.
கண் எரிச்சல் மற்றும் கண்களில் மசமசப்பு எனப்படும் பார்வை மந்தத்தை போக்க ஒரு வாணலியில் சில எள்ளு பூக்களை போட்டு மிதமான தீயில் வதக்கி ஆரிய பின் கண்களில் வைத்து கட்டி வர கண் தொடர்பான கோளாறுகள் நீங்கும். இதனை தினமும் இரவு உறங்கு முன் இது போல கட்டி விட்டு காலையில் அவிழ்த்து விட வேண்டும். குணமாகும் வரை தொடர்ந்து இது போல செய்து வருதல் அவசியம்.
மேலும் எள்ளின் பூக்களில் உள்ள தேனும் உடல் நலத்திற்கு உகந்தது. இதனை உண்பதன் மூலம் உடல் பலமாகும். நோய் எதிர்ப்பு சக்தி கூடும். ஆரோக்கியம் மேம்படும்.
கண்பார்வை கூர்மையாகவும் தெளிவாகவும் இருக்க எள்ளு பூ -
Reviewed by Author
on
May 11, 2018
Rating:
No comments:
Post a Comment