அண்மைய செய்திகள்

recent
-

அமெரிக்கா தகவல் -H-1B- எந்த நாட்டினருக்கு அதிகம்?


கடந்த 2 ஆண்டுகளில் இந்தியர்களுக்கே 74 சதவித H-1B விசா வழங்கப்பட்டுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
அமெரிக்காவில் வெளிநாடுகளைச் சேர்ந்த தொழில்நுட்ப பிரிவினர் தங்கி பணிபுரிய ஆண்டுதோறும் H-1B விசா வழங்கப்படுகிறது.

இந்நிலையில், கடந்த 2016ஆம் ஆண்டு 74.2 சதவித H-1B விசாக்களையும், 2017ஆம் ஆண்உ 75.6 சதவித H-1B விசாக்களையும் இந்தியர்களுக்கு வழங்கியுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
கடந்த 2016ஆம் ஆண்டில் 70,737 இந்தியர்கள் தொடக்கத்தில் H-1B விசாக்களைப் பெற்றனர். ஆனால், இந்த எண்ணிக்கை 2017ஆம் ஆண்டில் 67,815 ஆக குறைந்தது.

அதேசமயம் 2016ஆம் ஆண்டில், 1,85,489 இந்தியர்கள் தங்களது பணியை தொடர வேண்டி விசா பெற்றனர். இந்த எண்ணிக்கை 2017ஆம் ஆண்டில் 2,08,608 ஆக அதிகரித்துள்ளதாக தெரிய வந்துள்ளது.
இதற்கிடையில், சீனாவைச் சேர்ந்தவர்களுக்கு 2016ஆம் ஆண்டு 9.3 சதவித H-1B விசாக்களும், 2017ஆம் ஆண்டு 9.4 சதவித H-1B விசாக்களும் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மொத்தமாக 2,56,226 இந்தியர்கள் 2016ஆம் ஆண்டிலும், சுமார் 2,76,423 இந்தியர்கள் 2017 ஆம் ஆண்டிலும் H-1B விசாக்கள் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


PTI

அமெரிக்கா தகவல் -H-1B- எந்த நாட்டினருக்கு அதிகம்? Reviewed by Author on May 08, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.