முற்று முழுதாக யாழில் வடிவமைக்கப்பட்ட கார்களின் கண்காட்சி
முற்று முழுதாக யாழ்ப்பாணத்தில் வடிவமைக்கப்பட்ட கார்களின் கண்காட்சி யாழ். பல்கலைக்கழக மைதானத்தில் வெகு சிறப்பாக இடம்பெற்றுள்ளது.
குறித்த கண்காட்சி யாழ்.பல்கலைகழக பௌதீக கல்வி அலகு இயக்குனர் கே.கணேசநாதன் தலைமையில் இன்று காலை இடம்பெற்றுள்ளது.
இதில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் பொ.பாலசுந்தரம்பிள்ளை மற்றும் இ. பாலசுந்தரம்பிள்ளை ஆகியோர் முதன்மை விருந்தினர்களாகக் கலந்து கொண்டு சிறப்பித்திருந்தனர்.
இதன்போது யாழ். பல்கலைக்கழக ஆங்கிலப் போதனா மொழியியல் துறைப் பேராசிரியர் மகேஸ்வரக்குருக்கள், சரவணபவ ஐயர் மற்றும் அவரது குழுவினரது தயாரிப்பில் உருவான கார்கள் அறிமுகம் செய்து வைக்கப்பட்டன.
கண்காட்சியில் அல்ரா லைட் பிக்கப் (Ultra light Pickup), சோலர் போவரட் பேபி கார் (Solar Powered baby car), பெடல் பவர் கார் (Pedal Power car) போன்ற கார் இனங்கள் காட்சிப்படுத்தப்பட்டதுடன்.
அத்துடன், உடற்பயிற்சி செய்வதற்கான சிறிய நான்கு சில்லு சைக்கிள் போன்று ஓடும் வாகனமும், சிறிய மோட்டார் சைக்கிளும் காட்சிப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
முற்று முழுதாக யாழில் வடிவமைக்கப்பட்ட கார்களின் கண்காட்சி
Reviewed by Author
on
May 14, 2018
Rating:

No comments:
Post a Comment