காவிரி வரைவு திட்டத்தை தாக்கல் செய்தது மத்திய அரசு -
காவிரி விவகாரம் தொடர்பில் கூடுதல் அவகாசம் வழங்க முடியாது என்ற நிபந்தனையுடன் இன்று வரைவு திட்டத்தை தாக்கல் செய்ய மத்திய அரசு உத்தரவிட்டது.
இதன்படி இன்று உச்சநீதிமன்றத்துக்கு வருகை தந்த மத்திய நீர்வளத்துறை செயலாளர் யு.பி.சிங் நேரில் ஆஜராகி மத்திய வரைவு திட்ட அறிக்கையை தாக்கல் செய்தார்.
இதனை தொடர்ந்து விசாரணையை 16ம் திகதி ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்.
வரைவு திட்டத்தில் இருப்பது என்ன?
- மத்திய அரசு அமைக்கும் காவிரி அமைப்பு தலைவரின் பதவிக்காலம் 5 ஆண்டுகள் அல்லது 65 வயது வரை தலைவராக நீடிப்பார்.
- மொத்தம் 10 பேர் குழுவில் இடம்பெறுவர், அதில் மத்திய நீர்வளத்துறை செயலாளர் யுவி சிங்கும் இடம்பெறுவார்.
- 10 பேர் கொண்ட அமைப்பில் இருவர் முழுநேர உறுப்பினராக செயல்படுவர், பகுதிநேர உறுப்பினர்கள் 2 பேர், மாநிலத்துக்கு ஒருவர் என 4 பேர் அமைப்பில் இருப்பர்.
- நடுவர் மன்றம் மற்றும் பிப்ரவரி 16ம் திகதி உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை காவிரி அமைப்பு செயல்படுத்தும்.
- அணைகளின் இயக்கத்தை மேற்பார்வையிடும் அதிகாரம் காவிரி அமைப்புக்கு இருக்கும்.
- 10 பேர் கொண்ட குழுவின் கீழ் 9 பேர் கொண்ட ஒழுங்காற்று குழு செயல்படும், காவிரியில் நீர் திறப்பது ஒழுங்காற்று குழுவின் உதவியில் செயல்படுத்தப்படும்.
காவிரி வரைவு திட்டத்தை தாக்கல் செய்தது மத்திய அரசு -
Reviewed by Author
on
May 15, 2018
Rating:

No comments:
Post a Comment