மன்னார் சட்டத்தரணிகள் சங்கத்தின் இலவச சட்ட ஆலோசனை
மன்னார் அல்-அஸ்ஹர் தேசிய பாடசாலை மண்டபத்தில் குறித்த ஆலோசனை சட்ட முகாம் நடத்தப்பட்டுள்ளது.
இதன்போது, மன்னார் மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட உயர்தர வகுப்பு மாணவர்களுக்கு சட்ட விழிப்புணர்வு கருத்தரங்கு இடம்பெற்றதுடன், அதன் பின்னர் அப்பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு சட்ட ஆலோசனை முகாம் நடத்தப்பட்டுள்ளது. இந்த சட்ட ஆலோசனை முகாமில், காணிப்பிரச்சினைகள், பணக்கொடுக்கல் வாங்கல் தொடர்பான பிரச்சினைகள், குடும்ப வன்முறைகள் தொடர்பான பிரச்சினைகள், காணாமல் ஆக்கப்பட்டோர், பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளோர் .
தொடர்பான விளக்கங்கள், பிறப்பு, இறப்பு அத்தாட்சிப்பத்திரங்கள் தொடர்பாக சட்ட ஆவணங்கள், விபத்து இழப்பீடு தொடர்பானவை, குற்றவியல் சட்டங்கள் போன்றவை தொடர்பாக மக்களுக்கு தேவைக்கு ஏற்ப சட்ட ஆலோசனைகள் வழங்கப்பட்டன.
குறித்த சட்ட ஆலோசனை முகாமில் மன்னார் சட்டத்தரணிகள் சங்கத்தின் சட்டத்தரணிகள் கலந்து கொண்டு மக்களுக்கு இலவச சட்ட ஆலோசனைகளை வழங்கியுள்ளனர்.
இதன் போது நூற்றுக்கணக்கானவர்கள் கலந்து கொண்டு பயன் அடைந்தமை குறிப்பிடத்தக்கது.
மன்னார் சட்டத்தரணிகள் சங்கத்தின் இலவச சட்ட ஆலோசனை
Reviewed by Author
on
May 27, 2018
Rating:

No comments:
Post a Comment