மாணவிகளின் உள்ளாடையை கழற்றுமாறு வற்புறுத்தல்! அவமானமாக இருந்ததாக மாணவி வேதனை -
பாலக்காடு கொப்பம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் மாணவி ஒருவர் தேர்வு எழுத சென்றுள்ளார். தேர்வு அறைக்குள் நுழையும் முன்பு அவருக்கு சோதனைகள் நடத்தப்பட்டது.
சோதனை முடிந்ததால் உள்ளே செல்லலாம் என்று நினைத்த போது, சோதனையாளர்கள் மேல் உள்ளாடையை கழற்றுமாறு கூறியுள்ளனர்.
சோதனையாளர்களின் சொன்னதை கேட்டு அதிர்ச்சியடைந்த அப்பெண், சிறிது நேரம் செய்வதறியாமல் நின்றுள்ளார்.
கலவரமடைந்த முகத்துடன் காணப்பட்ட அந்த மாணவியும் வேறு வழியில்லாமல் சோதனையாளர்களின் வலியுறுத்தலுக்கு இசைந்தார்.
இந்நிலையில் இது குறித்து அந்த மாணவி பாலக்காட்டில் உள்ள காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அதன் பின் மாணவி கூறுகையில், இது விதிமுறை என்பதை நான் ஒப்புக் கொள்கிறேன். ஆனால், அதனை சரியாக நடைமுறைப்படுத்தி இருக்க வேண்டும்.
ஆடை மாற்றும் அறைகள் சரியான பாதுகாப்பு உடன் இல்லை, இதுதான் விதிமுறை என்று நினைத்து, அந்த இடத்தில் நான் எதிர்ப்பு எதனையும் தெரிவிக்கவில்லை.
உள்ளாடையை கழட்ட நேர்ந்த போது மிகவும் அவமானமாக உணர்ந்ததாகவும், தன்னுடன் சேர்த்து மேலும் 25 மாணவிகளின் மேல் உள்ளாடைகளை சோதனையின் போது கழற்ற வைத்தார்கள் என்றும் கூறியுள்ளார்.
சிபிஎஸ்இ விதிமுறைகளின் படி ஆடைகளில் மெட்டல் இருக்கக் கூடாது. அந்த மாணவியின் உள்ளாடையில் மெட்டல் இருந்துள்ளததன் காரணமாகவே சோதனை நடத்தப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.
மாணவிகளின் உள்ளாடையை கழற்றுமாறு வற்புறுத்தல்! அவமானமாக இருந்ததாக மாணவி வேதனை -
Reviewed by Author
on
May 10, 2018
Rating:
No comments:
Post a Comment