தாயகம் திரும்பிய நிலையில் கைது செய்யப்பட்ட தமிழர்களுக்கு பிணை -
தமிழகம் அகதி முகாமில் இருந்து படகு மூலம் தாயகம் திரும்பிய நிலையில், கைது செய்யப்பட்ட 4 பேருக்கும் மல்லாகம் நீதிமன்றம் பிணை அனுமதி வழங்கியுள்ளது.
குறித்த அனைவரையும் நேற்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போது நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
காங்கேசன்துறையை அண்மித்த கடற்பரப்பில் வைத்து நேற்று இவர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர்.
சட்டவிரோதமாக படகு மூலம் நாடு திரும்பியபோதே அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. திருகோணமையை சேர்ந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வரே இவ்வாறு கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள், 2006ஆம் ஆண்டு உள்நாட்டு போர் காரணமாக கடல்வழியாக தமிழகம் சென்றுள்ளதுடன், கடந்த பன்னிரெண்டு வருடங்களாக தமிழக இலங்கை அகதிமுகாமில் வசித்து வந்துள்ளனர்.
இவர்கள் வசித்த அகதி முகாமில் போதிய வசதிகள் இன்மை மற்றும் பிள்ளைகளுக்கு பிறப்புச் சான்றிதழ் பெறுவதிலுள்ள இடர்பாடுகளால் இவர்கள் கடல் வழியாக சட்டவிரோமான முறையில் நாடு திரும்பியதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இதனிடையே, குறித்த நால்வரையும் படகு மூலம் சட்டவிரோதமாக நாட்டுக்கு அழைந்து வந்த படகோட்டிகள் இருவரையும் எதிர்வரும் 21 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறும் நீதிமன்று உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தாயகம் திரும்பிய நிலையில் கைது செய்யப்பட்ட தமிழர்களுக்கு பிணை -
Reviewed by Author
on
May 17, 2018
Rating:

No comments:
Post a Comment