சம்பந்தனுக்கு எதிராக சர்வதேச நாடாளுமன்ற சங்கத்தில் முறைப்பாடு? -
எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தொடர்பில் சர்வதேச நாடாளுமன்ற சங்கத்திடம் முறைப்பாடு செய்யவுள்ளதாக கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிசிர ஜெயகொடி தெரிவித்துள்ளார் என கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
குறித்த செய்தியில்,
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பை சேர்ந்த 93 நாடாளுமன்ற உறுப்பினர்களில் 70 பேர் எதிர்க்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்துகின்றனர்.
எனினும், 16 பேர் கொண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எதிர்கட்சித் தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ளமை பிரச்சினைக்கு உரிய விடயம்.
எனவே, இது தொடர்பில் சர்வதேச நாடாளுமன்ற சங்கத்துக்கு உத்தியோகபூர்வமாக முறைப்பாடு செய்யப்படவுள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.
சம்பந்தனுக்கு எதிராக சர்வதேச நாடாளுமன்ற சங்கத்தில் முறைப்பாடு? -
Reviewed by Author
on
May 13, 2018
Rating:

No comments:
Post a Comment