அண்மைய செய்திகள்

recent
-

தமிழர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ள புலம்பெயர் இளம் தமிழ் வீரரின் மறைவு -


ஜேர்மன் நாட்டினைச் சேர்ந்த புலம் பெயர் தமிழரான இளம் கால்பந்தாட்ட வீரர் ஈழவன் பிரபாகரன் என்பவர் திடீரென கடந்த வியாழக்கிழமை நோய்த்தாக்கம் ஒன்றினால் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டின் பிரபல Eintracht Braunschweig என்ற விளையாட்டு கழகம் அறிவித்துள்ளது.

14 வயதுடைய குறித்த சிறுவன் சர்வதேச ரீதியிலான போட்டிகளுக்கு விளையாடுவதற்கான தகுதிகளைக்கொண்டிருந்ததாகவும் குறித்த விளையாட்டு கழகம் அறிவித்துள்ளது.
அவருடைய திறமை உலகிற்கு வெளிப்படுத்தப்படும் முன்னரே குறித்த சிறுவன் உயிரிழந்துள்ளமை அவரது குடும்பத்தினரை மாத்திரமின்றி அனைவரையும் கவலையில் ஆழ்த்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன், உயிரிழந்த குறித்த வீரருக்கு கௌரவம் செலுத்தும் வகையில் நாளைய தினம் Eintracht Braunschweig அணியின் தலைவர் ஹோல்ஸ்டெயின் கொயில் தலைமையில் கால்பந்து போட்டியை நடத்தவுள்ளதாக விளையாட்டுக்கழகத்தின் பணிப்பாளர் மார்க் ஆர்னோல்ட் அறிக்கை விடுத்துள்ளார்.

சிறந்த கால்பந்தாட்ட வீரர் மற்றும் நேர்மறையான ஈழவன் பிரபாகரனின் Eintracht Braunschweig விளையாட்டுக் கழக குடும்ப என்றென்றும் நினைவில் வைத்திருக்கும் என இளையோர் அபிவிருத்தி மத்திய நிலையத்தின் விளையாட்டு மற்றும் ஒருங்கிணைப்பு தலைவர்களான ஒலிவர் ஹியின் மற்றும் டெனிஸ் குரூப்கே ஆகியோர் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும், குறித்த வீரருக்கு 14 வயதெனினும் உலகத்திலுள்ள அனைத்து கால்பந்தாட்ட வீரர்களுக்கும் சவாலாய் அமையக்கூடிய ஆற்றல் கொண்டிருந்தவர் என குறிப்பிடப்படுகின்றது.

ஒரு குறிப்பிட்ட கழகம், குறித்த வீரரை பல மில்லியன்கள் கொடுத்து தனது கழகத்தில் இணைத்து கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
அவரது திறமை உலகிற்கு வெளிப்படுத்தப்படும் முன்னரே அவர் உயிரிழந்துள்ளமை தமிழர் தாயகம் மாத்திரமின்றி உலகத்தின் பல முன்னணி விளையாட்டு கழகங்களைச் சேர்ந்தவர்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
இவ்வாறு, ஈழத்திற்கு உலகளவில் பெருமை சேர்க்க வேண்டிய ஒரு இளம் வீரர், உலகத்தினரால் அறியப்பட முன்னரே உயிரிழந்தமை ஈழத்திற்கு மாத்திரமின்றி சர்வதேச கால்பந்தாட்ட உலகிற்கே ஓர் பேரிழப்பாகும் என பொதுமக்களால் குறிப்பிடப்படுகின்றது.

தமிழர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ள புலம்பெயர் இளம் தமிழ் வீரரின் மறைவு - Reviewed by Author on May 13, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.