இலங்கையில் பெருமளவு நிதியை பதுக்கியுள்ள இந்திய முன்னாள் அமைச்சரின் குடும்பம் -
இந்தியாவின் முன்னாள் நிதியமைச்சர் பா.சிதம்பரத்தின் மகன் கார்த்திக், அவரின் தாய் நளினி, மனைவி ஸ்ரீநிதி ஆகியோருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சென்னை மேல் நீதிமன்றத்தில் இந்த வழக்கு இந்திய வருமான வரி திணைக்களத்தினால் தாக்கல் செய்யப்பட்டது.
இலங்கை உட்பட்ட வெளிநாடுகளில் உள்ள சொத்துக்களை வெளிப்படுத்தவில்லை என்ற குற்றச்சாட்டின் பேரிலேயே இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. எனினும் இலங்கையில் உள்ள சொத்துக் குறித்து சரியான தகவல் தெரிவிக்கப்படவில்லை.
எனினும் பிரித்தானியா பொஸ்டனில் ஸ்ரீநிதியால் கொள்வனவு செய்யப்பட்ட 5.37 கோடி ரூபா பெறுமதியான சொத்து, கார்த்திக்கினால் கொள்வனவு செய்யப்பட்ட 3.28 கோடி ரூபா பெறுமதியான சொத்து போன்றவை வெளிப்படுத்தப்படவில்லை என்று வழக்கில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் பெருமளவு நிதியை பதுக்கியுள்ள இந்திய முன்னாள் அமைச்சரின் குடும்பம் -
Reviewed by Author
on
May 12, 2018
Rating:

No comments:
Post a Comment