மன்னார் மாவட்டத்தில் உள்ள மீனவ கிராமங்களில் சிறப்பாக இடம் பெற்ற உலக தொழிலாளர் தினம்.(படம்)
மன்னார் மாவட்டத்தில் உள்ள மீனவ கிராமங்களில் இன்று செவ்வாய்கிழமை 01-05-2018 காலை சிறப்பான முறையில் தொழிலாளர் தினம் நினைவு கூறப்பட்டுள்ளது.
தொழிலாளர் தினமான இன்று சிறப்பான முறையில் உலகலாவிய ரீதியில் நினைவு கூறப்பட்டது.
அதற்கமைவாக மன்னார் மாவட்டத்தில் உள்ள மீனவ கிராமங்களிலும் இன்று செவ்வாய்க்கிழமை காலை சிறப்பான முறையில் நினைவு கூறப்பட்டது.
தலைமன்னார்,பேசாலை,தாழ்வுபாடு,பள்ளிமுனை,பனங்கட்டிக்கோட்டு ஆகிய மீனவ கிராமங்களில் இன்று செவ்வாய்க் கிழமை காலை கடற்கரை பகுதியில் விசேட திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது.
-மோலும் மாவட்டத்தில் உள்ள அனைத்து கத்தோலிக்க தேவாலயங்களில் மாலை மற்றும் மாலை நேரங்களில் விசேட திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டுள்ளது.
-மேலும் பேசாலை கடற்கரையில் மீனவர்களின் உதவியுடன் அமைக்கப்பட்ட புனித சூசையப்பர் சிற்றாலயம் இன்றைய தினம் பேசாலை பங்குத்தந்தையினால் வைபவ ரீதியாக திறப்பு விழா செய்யப்பட்டு உலக தொழிலாளர் தின திருப்பலியினை அருட்தந்தையர்களான பெனோ அலெக்சாண்டர் சில்வா மற்றும் றெஜினோல்ட் ஆகியோர் இணைந்து கூட்டுத்திருப்பலியாக ஒப்புக்கொடுத்தனர்.
திருப்பலியின் முடிவில் புனித சூசையப்பரின் திருச்சொரூப ஆசீர் வழங்கப்பட்டதோடு, மீனவர்களின் தொழில் உபகரணங்களும் ஆசீர் வதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

மன்னார் மாவட்டத்தில் உள்ள மீனவ கிராமங்களில் சிறப்பாக இடம் பெற்ற உலக தொழிலாளர் தினம்.(படம்)
Reviewed by Author
on
May 02, 2018
Rating:

No comments:
Post a Comment