ஜேர்மன் வாழ் தமிழர்கள் அழைப்பு -எங்கள் தொப்புள் கொடி உறவுகளுக்காக நீதியை வேண்டுவோம்!
தூத்துக்குடியில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் உலகத் தமிழ் மக்களை உலுக்கியுள்ளது. தொப்புள்கொடி உறவுகளுக்காக புலம்பெயர்ந்த நாடுகள் முழுவதும் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.
இந்நிலையில் ஜேர்மனிலும் போராட்டத்திற்கான அழைப்பினை ஜேர்மன் வாழ் தமிழ் மக்கள் விடுத்துள்ளனர். அவர்கள் விடுத்துள்ள அழைப்பில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
தூத்துக்குடியில் செயல்பட்டு வரும் ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி 18க்கும் மேற்பட்ட கிராம மக்கள், நேற்று 100-ஆவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சனநாயக ரீதியிலான ஒரு கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் ஆயிரக்கணக்கானோர் தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தை நோக்கிச் சென்றுள்ளனர். அப்போது காவல் துறையினருக்கும் மக்களுக்கும் இடையே மோதல் வெடித்ததில் காவல்துறையினர் சரமாரியாக மக்கள் கூட்டத்தை நோக்கிச் சுட்டதில் அப்பாவி மக்கள் கொல்லப்பட்டதுடன் பலர் படுகாயம் அடைந்துள்ளனர்.
இந்தத் துப்பாக்கிச்சூட்டில் 3 பெண்கள் உட்பட 14 பேர் உயிரிழந்தனர். இதற்கு அரசியல் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்ற நிலையில் தொப்பிள்கொடி உறவுகளான ஈழத்தமிழர்கள் சார்பில் யேர்மன் வாழ் தமிழ் மக்களும் தமிழக மக்களின் இந்தத் துயரச் சம்பவத்திற்கு எமது ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
திட்டமிட்ட கொடூரமான அரச பயங்கரவாத ஒடுக்குமுறையை கண்டித்தும் எமது தமிழக உறவுகளுக்கு ஆதரவாகவும் எதிர்வரும் திங்கள்கிழமை மாலை 16:30 மணிக்கு யேர்மன் தலைநகரத்தில் இந்திய தூதரகத்திற்கு முன்பாகவும், பிராங்பேர்ட் நகரில் இந்திய துணைத்தூதரகத்திற்கு முன்பாகவும் கவனயீர்ப்பு நிகழ்வுகள் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜேர்மன் வாழ் தமிழர்கள் அழைப்பு -எங்கள் தொப்புள் கொடி உறவுகளுக்காக நீதியை வேண்டுவோம்!
Reviewed by Author
on
May 25, 2018
Rating:

No comments:
Post a Comment