அண்மைய செய்திகள்

recent
-

டிரம்புக்காக விட்டுக் கொடுத்த கிம் ஜாங் உன்


வடகொரியா தலைவர் கிம் ஜாங் உன் - அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ஆகியோர் ஜூன் மாதம் 12-ம் திகதி சிங்கப்பூரில் சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தவுள்ளனர்.

குறித்த நிகழ்வுக்கு முன்னதாக வடகொரியா தன்வசம் வைத்துள்ள அணு ஆயுதங்களை தங்களிடம் ஒப்படைத்தால் வாங்கிகொள்ள தயாராக இருப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
இந்நிலையில், வடகொரியாவின் வடகிழக்கில் மண்ட்டாப் மலைப்பகுதியில் உள்ள புங்யே-ரி பகுதியில் அந்நாடு அணு குண்டு பரிசோதனை நடத்தும் மையத்தையும்,

இதற்காக மலைகளை குடைந்து வெட்டப்பட்டுள்ள ரகசிய சுரங்கங்களையும் நிர்மூலமாக்கி மூடிவிட வடகொரியா அரசு முடிவெடுத்துள்ளதாக அரசுக்கு சொந்தமான ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பருவநிலை மற்றும் காற்றின் போக்கு ஆகியவற்றை கருத்தில் கொண்டு வரும் 23 அல்லது 25-ம் திகதிகளில் இந்த மூடுவிழா நடக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், அப்பகுதியில் உள்ள அணு ஆராய்ச்சி மற்றும் கண்காணிப்பு மையங்கள், சோதனை மற்றும் பாதுகாப்பு சாவடிகளும் அகற்றப்படும் என தெரியவந்துள்ளது.
இந்த நிகழ்வுக்கு சர்வதேச பார்வையாளர்களையும் அழைத்து விழா போன்று நடத்த வடகொரியா முடிவு செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

டிரம்புக்காக விட்டுக் கொடுத்த கிம் ஜாங் உன் Reviewed by Author on May 13, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.