பாரதிராஜா மீதான வழக்குப்பதிவு பழிவாங்கும் செயல்: வைரமுத்து
வைரமுத்துவுக்கு ஆதரவாக இயக்குநர் பாரதிராஜா தொடர்ந்து குரல் கொடுத்து வந்தார்.
ஜனவரி 18ஆம் தேதி சென்னை வடபழனியில் கடவுள் 2 திரைப்பட விழாவில் கலந்துகொண்டு பேசிய இயக்குநர் பாரதிராஜா, வைரமுத்துவுக்கு ஆதரவா ஆயுதம் எடுப்போம் என்றும் இந்து கடவுள் குறித்து அவதூறாக விமர்சித்ததாகவும் கூறப்பட்டது.
இந்நிலையில், இந்து கடவுள் குறித்து அவதூறாக பேசியதாகவும் இந்து மக்கள் முன்னணியைச் சேர்ந்த நாராயணன் என்பவர் புகார் அளித்தார்.
அந்தப் புகாரின்பேரில் வடபழனி காவல்துறையினர் பாரதிராஜா மீது மத உணர்வுகளைப் புண்படுத்துதல், கொலை மிரட்டல் விடுத்தல் ஆகிய பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இது குறித்துக் கருத்துத் தெரிவித்துள்ள கவிஞர் வைரமுத்து, பாரதிராஜா மீது வழக்குப் பதிந்துள்ளது பழிவாங்கும் செயல் எனத் தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். வழக்குப் பெரிதல்ல என்றும், ரப்பர் மரத்துக்கு ரணங்கள் புதிதல்ல என்றும், பாரதிராஜாவைச் சட்டப்படி மீட்டெடுப்போம் என்றும் வைரமுத்து குறிப்பிட்டுள்ளார்.
பாரதிராஜா மீது வழக்கு— வைரமுத்து (@vairamuthu) May 13, 2018
பழிவாங்கும் செயலாகும்.
வழக்கு பெரிதல்ல;
ரப்பர் மரத்துக்கு ரணங்கள் புதிதல்ல.
அவரை நாங்கள்
சட்டப்படி மீட்டெடுப்போம்.#Bharathiraja
பாரதிராஜா மீதான வழக்குப்பதிவு பழிவாங்கும் செயல்: வைரமுத்து
Reviewed by Author
on
May 14, 2018
Rating:

No comments:
Post a Comment