அண்மைய செய்திகள்

recent
-

நடிகர்களான விஜய், அஜித்துக்காக முட்டாள்களாக மாறும் யாழ்ப்பாண இளைஞர்கள்!


சமூக ஒழுக்கம் மற்றும் கட்டுப்பாட்டுக்கு பெயர் போன யாழ்ப்பாணம் தற்போது சினிமா மோகத்தில் மூழ்க்கி கொண்டிருக்கிறது.
தமிழகத்தில் காணப்படும் சினிமா கலாச்சாரம் தற்போது, தாயகத்தையும் முழுமையாக ஆக்கிரமிக்கத் தொடங்கியுள்ளது.
இந்நிலையில் நேற்று முன்தினம் தென்னிந்திய நடிகர் அஜித்குமார் தனது பிறந்த நாளை கொண்டாடினார்.

இதன் முன்னிட்டு யாழ்ப்பாணத்திலுள்ள அவரது ரசிகர்களும் அவருக்கான பிறந்த நாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
யாழ்ப்பாணம் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலைக்கு அருகாமையில் அஜித்துக்கு பனர் வைத்து பிறந்த நாள் கொண்டாடியுள்ளனர்.
நடிகர் விஜயக்கும் இவ்வாறு பெரிய பனர்கள் வைத்து பால் ஊற்றி பிறந்தநாள் கொண்டாடும் பைத்தியகார இளைஞர்களும் தாயக்தில் உருவாகியுள்ளனர்.
இதேவேளை அண்மைக்காலமாக தென்னிந்திய சினிமா நட்சத்திரங்கள் யாழ்ப்பாணத்தை இலக்கு வைத்து படையெடுக்க ஆரம்பித்துள்ளனர்.
கடந்த மாதத்தில் பிக்பாஸ் பிரபலங்கள் உட்பட பலர் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்தனர். அதிலும் சிலர் தலைவர் பிரபாகரனின் இருப்பிடத்தை பார்ப்பதிலும் ஆர்வம் காட்டியுள்ளனர்.

தாயக இளைஞர்கள் மத்தியில் சமுதாய சீர்கேடுகளை ஏற்படுத்தி, கலாச்சாரத்தை அழிக்கும் வகையில் சில தரப்பினால் திட்டமிட்ட வகையில் இவ்வாறான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறதா என கேள்வி எழுப்பியுள்ளது.

வழமைக்கு மாறாக இவ்வாறான விஜயங்கள் சந்தேகங்களை ஏற்படுத்துவதாகவும், தாயக இளைஞர்களின் சினிமாத்தனமான செயற்பாடுகள் நாளைய சந்ததியின் எதிர்காலம் குறித்து அச்ச உணர்வை ஏற்பட்டுள்ளதாக சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் தாயகம் இருந்த வேளையில், இவ்வாறான சமூக சீர்கேடுகள் ஏற்பட்டதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
நடிகர்களான விஜய், அஜித்துக்காக முட்டாள்களாக மாறும் யாழ்ப்பாண இளைஞர்கள்! Reviewed by Author on May 03, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.