கடும் காற்று! 185 வீடுகள் சேதம் -
நாட்டில் நிலவிவரும் கடும் காற்றுடன் கூடிய காலநிலைக்காரணமாக 185 வீடுகள் சேதமடைந்திருப்பதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பிரதிப்பணிப்பாளர் பிரதீப்கொடிப்பிலி தெரிவித்துள்ளார்.
அத்துடன், 5 மீன் பிடி படகுகள் சேமடைந்திருப்பதாகவும் அவர் கூறினார்.
இதேவேளை, நாட்டிலும் நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளிலும் காணப்படும் காற்றுடன் கூடிய நிலைமை ஜூன் 11 நாளை வரை தொடர்ந்து காணப்படுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
ஜூன் 11க்கு பின்னர் இந்நிலைமை படிப்படியாக குறையுமென எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் இன்று காலை வெளியிட்டுள்ள வானிலை அறிக்கையில் தெரிவித்துள்ளது.
கடும் காற்று! 185 வீடுகள் சேதம் -
Reviewed by Author
on
June 11, 2018
Rating:

No comments:
Post a Comment