அண்மைய செய்திகள்

recent
-

பூமியை போல் புதிய கிரகத்தை கண்டுபிடித்து சாதனை படைத்த இந்திய விஞ்ஞானிகள் -


இந்தியாவில் அகமதாபாத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் குழு ஒன்று, பூமியைப் போலவே புதிய கிரகத்தை கண்டுபிடித்து சாதனை படைத்துள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் சில புதிய கிரகங்களை விஞ்ஞானிகள் குழு கண்டுபிடிக்கும். அவற்றில் பெரும்பாலும் நாசாவின் பங்கு இருக்கும். இந்தியா விண்வெளி ஆராய்ச்சியில் உயர்ந்து இருந்தாலும், விஞ்ஞானிகள் குழுக்களானது புதிய கிரகங்களை கண்டுபிடிக்க ஈடுபாடு காட்டவில்லை.
இந்நிலையில், இந்தியா முதல் முறையாக புதிய கிரகம் ஒன்றை கண்டுபிடித்துள்ளது. அகமதாபாத்தை சேர்ந்த அபிஜித் சக்ரபோர்த்தியின் தலைமையிலான, PRL விஞ்ஞானிகள் குழு இந்த கிரகத்தை கண்டுபிடித்துள்ளது.

இந்த கிரகம் சூரிய குடும்பத்தில் உள்ளதாகவும், பூமியில் இருந்து சுமார் 600 ஒளி ஆண்டுகள் தொலைவில் இருப்பதாகவும் இந்திய விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். மேலும், EPIC 211945201b அல்லது K2-236 என பெயரிடப்பட்டுள்ள இந்த கிரகம், பார்ப்பதற்கு பூமியைப் போல் உள்ளது.
ஆனால், பூமியை விட 10 மடங்கு எடை கொண்டது. இந்த கிரகத்தைச் சுற்றி 600 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை நிலவுவதால், இங்கு உயிரினம் வாழ்வதற்கு வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது.

பூமியை போல் புதிய கிரகத்தை கண்டுபிடித்து சாதனை படைத்த இந்திய விஞ்ஞானிகள் - Reviewed by Author on June 11, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.