அண்மைய செய்திகள்

recent
-

2018 ஐபிஎல் போட்டியில் வாங்கிய சம்பளத்திற்கு சிறப்பாக விளையாடிய வீரர்கள்


இந்தியாவில் ஆண்டுதோறும் நடைபெற்று வரும் உள்ளூர் தொடரான ஐபிஎல் தொடர் இந்தாண்டும் சமீபத்தில் நடைபெற்று முடிந்தது.
இந்த தொடரில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட, அதிக தொகைக்கு எடுக்கப்பட்ட வீரர்கள் பலரும் ரசிகர்களை ஏமாற்றினர்.
இந்நிலையில் இத்தொடரில் குறைந்த விலைக்கு எடுக்கப்பட்டாலும், அவர்கள் தங்களுடைய சிறப்பான ஆட்டத்தின் மூலம் அணிக்கு வெற்றிகளை தேடித்தந்தனர்.
அப்படிப்பட்ட டாப் 5 வீரர்கள் தான் இவர்கள்,
சஞ்சு சாம்சன்
ராஜஸ்தான் அணிக்காக 8 கோடிக்கு வாங்கப்பட்ட இவர் தன்னால் முடிந்த அளவிற்கு சிறப்பான ஆட்டத்தை கொடுத்துள்ளார்.
துவக்கத்தில் இருந்தே நல்ல ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த இவர் பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் 45 பந்துகளில் 92* ஓட்டங்கள் குவித்தார். நாக் அவுட் ஆட்டத்தில் ராஜஸ்தான் அணி வெற்றிபெறதாபோதிலும் அந்த அணிக்காக 50 ஓட்டங்கள் எடுத்திருந்தார். இறுதியாக, 15 போட்டிகளில் 441 ஓட்டங்கள் குவித்து இந்த ஐபிஎல் போட்டியில் அதிக ஓட்டங்கள் குவித்தவருக்கான பட்டியலில் 5-வது இடத்தை பிடித்தார்.
க்ருனால் பாண்டியா
இந்த ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணியால் 8.8 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டார். இருப்பினும் மும்பை அணி RTM முறைப்படி அதே தொகைக்கு மும்பை அணியே திரும்ப பெற்றுக்கொண்டது.
இந்த தொடரில் மும்பை அணி இக்கட்டமான சூழ்நிலையில் இருந்த போது, பல முறை வெற்றி தேடித் தந்துள்ளார். பந்து வீச்சில் 12 விக்கெட்டுகள் மட்டுமே வீழ்த்தியிருந்தாலும், பந்து வீச்சு சராசரி 7.07 மட்டுமே. இவர் துடுப்பாட்டத்தில் 228 ஓட்டங்கள் குவித்து கிட்டத்தட்ட 146 ஸ்ட்ரைக் ரேட் வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆண்ட்ரூ டை
கிங்ஸ் லெவேன் பஞ்சாப் அணிக்காக 7.2 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்ட இவர் அந்த அணிக்காக அதிக விக்கெட் வீழ்த்தியுள்ளார்.
அதுமட்டுமின்றி அதிக விக்கெட் வீழ்த்தியவர்கள் பட்டியலில் இவர் தான் முதல் இடம் பிடித்துள்ளார். இவர் அந்த அணிக்காக 14 போட்டிகள் விளையாடி 24 விக்கெட்டுகள் வீழ்த்தி PURPLE CAP தன் வசப்படுத்திக்கொண்டார்.
கே.எல்.ராகுல்
இந்திய அணி வீரரான கே.எல்.ராகுலை பஞ்சாப் அணி 11 கோடி கொடுத்து ஏலத்தில் எடுத்தது. அந்த அணிக்காக 14 போட்டிகள் ஆடி 659 ஓட்டங்கள் குவித்தார். 4 பந்துகளில் அதிவேக அரைசதம் விளாசிய இவர், இந்த தொடரில்
ஸ்ட்ரைக் ரேட் கிட்டத்தட்ட 160 வைத்துள்ளார்.
இந்த தொடரில் அதிக ஓட்டங்கள் குவித்தவர்களுக்கான பட்டியலில் மூன்றாவது இடம் பிடித்த இவருக்கும் இந்த 11 கோடி போதாது போல் இருக்கே என்று எண்ண வைத்தது.
ரஷீத் கான்
சன் ரைசர்ஸ் அணியால் 9 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்ட இவர், இந்த தொடரில் எதிரண்டி வீரர்களை தன்னுடைய சுழற்பந்து வீச்சின் மூலம் திணறடித்தார்.
அதிக டாட் பந்துகள், அதிக விக்கெடுகள், மிகசிறந்த கேட்ச்கள் மற்றும் சிறந்த ரன் அவுட்கள் மற்றும் 7 போட்டிகளில் 21 விக்கெட்டுகள் என வீழ்த்தி அனைவரையும் தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்தார்.

2018 ஐபிஎல் போட்டியில் வாங்கிய சம்பளத்திற்கு சிறப்பாக விளையாடிய வீரர்கள் Reviewed by Author on June 04, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.