மன்னாரில் 30வது தேசிய இளைஞர் விளையாட்டு விழா......
தேசிய இளைஞர் சேவை மன்றம் வருடா வருடம் நடத்தும் தேசிய மட்ட விளையாட்டு விழவிற்கான இளைஞர் யுவதிகளை தெரிவுசெய்யும் நிகழ்வின் முதற்கட்டமாக பிரதேச ரீதியில் உள்ள வீரர் மற்றும் வீராங்கனைகளை தெரிவு செய்யும் 30 வது பிரதேச விளையாட்டு விழா இன்று காலை 10 மணியளவில் மன்னார் பொது மைதானத்தில் ஆரம்பமானது.
மன்னார் பிரதேச இளைஞர் சேவை அதிகாரி சைமன் சில்வா தலைமையில் ஆரம்பமான இவ் விளையாட்டு நிகழ்வுக்கு மன்னார் நகர சபை உபதலைவர் திருவாளர்.ஜட்சன் மற்றும் மன்னார் மாவட்ட இளைஞர் சேவை அதிகாரி திருவாளர்.பூலோக ராஜா அவர்களும் மன்னார் இளைஞர் சேவை மன்றத்தின் பயிற்சி நிலைய பொறுப்பதிகாரி திருவாளர்.டியூக் குருஸ் அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
அத்துடன் மன்னார் மாவட்ட இளைஞர் சேவை மன்றத்தின் தேசிய பிரதிநிதிகளான செல்வன்.ஜோசப்நயன் மற்றும் கலாதரன் ஜசோதரனும் மன்னார் பிரதேச சம்மேளன பிரதிநிதிகளும் விளையாட்டு விழாவை சிறப்பித்தனர்.
மன்னார் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட 100 மேற்பட்ட இளைஞர் மற்றும் யுவதிகள் இவ் விளையாட்டு விழாவில் கலந்து கொண்டு வெற்றி கிண்ணங்களை மற்றும் சான்றிதழ்களை பெற்று கொண்டனர் குறித்த பிரதேச விளையாட்டு விழாவில் வெற்றி பெற்ற அணைத்து வீரர் வீராங்கனைகளும் வருகின்ற மாதம் நடைபெற இருக்கின்ற மாவட்ட மட்ட விளையாட்டு விழாவில் கலந்து கொள்ள இருப்பது குறிப்பிடதக்கது.

மன்னாரில் 30வது தேசிய இளைஞர் விளையாட்டு விழா......
Reviewed by Author
on
June 24, 2018
Rating:

No comments:
Post a Comment