நடிகர் விவேக் ட்வீட் -ஆசிரியர் பகவானுக்கு ஜனாதிபதி விருது:
வெள்ளியகரம் அரசு உயர்நிலை பள்ளி ஆசிரியர் பகவானுக்கு பணியிட மாற்றம் வந்ததும் அங்கு படித்து கொண்டிருந்த மாணவ மாணவிகளும் அவர்களது பெற்றோர்களும் ஆசிரியர் பகவான் அந்த பள்ளியை விட்டு போக கூடாது என்று போராடினர்.
மாணவர்கள் அனைவரும் ஆசிரியரை கட்டிக்கொண்டு போகாதீங்க சார் நீங்க இருந்தா நாங்க நல்லா படிப்போம் என்று கதறிய காட்சி சமூக வலைத்தளங்ககளில் வேகமாக பரவியது.
இதனையடுத்து ஆசிரியருக்கு பணியிட மாற்றல் 10 நாட்களுக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் நடிகர் விவேக் ஒரு ஆசிரியரின் இடமாற்றம் அங்குள்ள அத்தனை மாணவர்களையும் கதறி அழ வைத்திருக்கிறது என்றால் அவரது பண்பை பாருங்கள். ஆசிரியர் பகவானுக்கு ஜனாதிபதி விருது கிடைக்க வேண்டும் என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
ஒரு ஆசிரியரின் இடமாற்றம் ,மாணவர்களை கதறி அழச் செய்திருக்கிறது. அப்படி என்றால் அவரது பண்பை நினைத்துப் பாருங்கள். இவருக்கு சிறந்த ஆசிரியருக்கான ஜனாதிபதி விருது கிடைக்க வேண்டும்.
— Vivekh actor (@Actor_Vivek) June 22, 2018
நடிகர் விவேக் ட்வீட் -ஆசிரியர் பகவானுக்கு ஜனாதிபதி விருது:
Reviewed by Author
on
June 23, 2018
Rating:

No comments:
Post a Comment