இரத்தினபுரியில் செத்துமடியும் தமிழ் கல்வி! 53 ஆயிரம் மாணவர்களின் எதிர்காலம்?
இலங்கை சுதந்திரமடைந்ததிலிருந்து இன்றைவரை இரத்தினபுரி மாவட்டத்திலிருந்து எந்தவொரு தமிழ் மாணவரும் பல்கலைக்கழகத்தில் வைத்திய மற்றும் பொறியியல் பீடங்களுக்கு சென்று சாதனைப்படைக்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
இரத்தினபுரி மாவட்டத்தில் தமிழ் தேசிய பாடசாலை இன்மையாலும் மாகாணசபைகளின்கீழ் இயங்கும் பாடசாலைகளில் விஞ்ஞான ஆய்வுக்கூட வசதிகளும் இல்லாததன் காரணமாகவே அவ் அவலம் நீடிக்கின்றது என தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பில் இரத்தினபுரி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் அண்மையில் நாடாளுமன்றில் அறிவித்திருந்தார்.
இரத்தினபுரி மாவட்டத்தில் 104 தமிழ்மொழி மூல பாடசாலைகள் காணப்படுகின்ற நிலையில், அவற்றுள் 42 ஆரம்ப பாடசாலைகளும், 62 இரண்டாம் நிலை பாடசாலைகளும் உள்ளடங்குகின்றன.
மேலும், இரத்தினபுரி மாவட்டத்தில் தமிழ் மொழி மூலம் கல்வி கற்கும் மொத்த மாணவர்களின் எண்ணிக்கை 53,269 என தெரிவிக்கப்படுவதோடு பல வருடக்காலமாக இந்த மாவட்டத்தில் இருந்து ஒரு தமிழ் மாணவரேனும் வைத்தியப்பீடம் தெரிவாகமுடியாத அவல நிலைக்கு இப்பகுதியில் தேசிய பாடசாலை இன்மையே காரணம் என சுட்டிக்காட்டப்படுகின்றது.
இரத்தினபுரி மாவட்டத்திலுள்ள தமிழ் மொழிமூல பாடசாலைகள் தொடர்பில் கல்வி அமைச்சர்களிடம் கேள்விகளை எழுப்பியிருந்த அவர், அமைச்சர் பதில் வழங்கிய பின்னரே மேற்படி தகவலை வெளியிட்டார்.
அதேவேளை, இரத்தினபுரி மாவட்டத்திலுள்ள தமிழ்மொழிமூலம் கல்வி பயிலும் மாணவர்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் அவர் வலியுறுத்தினார்.
இரத்தினபுரியில் செத்துமடியும் தமிழ் கல்வி! 53 ஆயிரம் மாணவர்களின் எதிர்காலம்?
Reviewed by Author
on
June 10, 2018
Rating:

No comments:
Post a Comment