வடக்கு கிழக்கு இணைந்த தாயகம் தான் தமிழர்களின் தீர்வு: சிவநாதன் -
இன்றைய தினம் மட்டக்களப்பு முகத்துவாரத்திலுள்ள சூழலியல் கற்கைகள் நிலைய மண்டபத்தில் கிழக்குத் தமிழர் ஒன்றியத்தின் செயற்பாடுகள் குறித்து நடைபெற்ற ஊடக சந்திப்பில் இவ்வாறு தெரிவித்தார்.
கிழக்கு தமிழர் ஒன்றியம் கிழக்குக்கு மாத்திரமானதோ வடக்குக் கிழக்கு இணைப்புக்கு எதிரானதொரு சக்தியோயல்ல நாங்கள் வடக்கு கிழக்கு இணைந்த தாயகம் தான் தமிழர்களின் தீர்வென்பதனை ஏற்றுக் கொள்கின்றோம்.
ஆனால் அது கிடைக்கப்பெறும் வரையில் கிழக்கு மாகாணத்தினை கிழக்கு மாகாணமாக வைத்துக் கொள்ள வேண்டும், அப்போது தான் ஏதாவது நன்மையிருக்கும் என்று கிழக்கு தமிழர் ஒன்றியத்தின் இணைப்பாளர்களான சிரேஸ்ட சட்டத்தரணி த.சிவநாதன் , செங்கதிரோன், த.கோபாலகிருஸ்ணன் ஆகியோர் தெரிவித்துள்ளனர். குறித்த ஊடக சந்திப்பில், கிழக்கு தமிழர் ஒன்றியத்தின் தலைவர் பேராசிரியர் மா. செல்வராஜா, செயலாளர் எந்திரி வ.பரமகுருநாதன், ஊடக இணைப்பாளர் த.ஈஸ்வரராஜா உள்ளிட்டோரும் இணைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
வடக்கு கிழக்கு இணைந்த தாயகம் தான் தமிழர்களின் தீர்வு: சிவநாதன் -
Reviewed by Author
on
June 10, 2018
Rating:

No comments:
Post a Comment