‘தமிழியல் தடங்கள்’நூலினதும் ‘அருளின் இராகங்கள்’ இறுவட்டினதும் வெளியீட்டு விழா-படங்கள்
‘அருளின் இராகங்கள்’ என்ற பாடல் இறுவட்டானது தமிழ் நேசன் அடிகளார் எழுதிய 5 கிறிஸ்தவத் திருவழிபாட்டுப் பாடல்களையும் இன்னும் புதிய திருப்பலி நூலின் செபங்களுக்கான 7 பாடல்களையும் உள்ளடக்கியுள்ளது.
முதன்மை விருந்தினர்
மேதகு இம்மானுவேல் பெனாண்டோ ஆண்டகை ஆயர் மன்னார்
விருந்தினர்களாக…
- அருட்திரு.எம்.நிர்மலராஜ் (செ.தா)-துணை அதிபர் அருள் ஆச்சிரமம்-யாழ்ப்பாணம்
- அருட்சகோதரர் S.E. றெஜினோhல்ட் அதிபர் மன்..புனித.சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலை மன்னார்
- அருட்சகோதரி-கிளேயா சுவானி மகாண முதல்வர் திருச்சிலுவைக்கன்னியர் சபை
- திருமதி. செலின் சுகந்தி செபஸ்ரியன்-வலையக்கல்விப்பணிப்பாளர்
- சிரேஸ்ட சட்டத்தரணி திரு.பி.புனிதநாயகம் தலைவர்-கத்தோலிக்க ஒன்றியம் மன்னார்
- மஹா.தர்மகுமார குருக்கள் தலைவர் சர்வமதப்பேரவை-மன்னார்
- சட்டத்தரணி M.M.சபுறுதீன் தலைவர் RPR.மன்னார்
- திருமதி.ரெஜினா இராமலிங்கம் தலைவர் திருக்குடும்ப பொதுநிலையினர் மற்றும் ஆசியத்தலைவர்
- திரு.S.A. உதயன் தேசியக்கலைஞர்-தலைவர்-தமிழ்சங்கம் மன்னார்
- திரு.A.நிஷாந்தன் எழுத்தாளர் மன்னார்கிளை உலகத்தமிழ் பண்பாட்டு இயக்கம் இவர்களுன் அருட்தந்தையர்கள் அருட்சகோதரிகள் பொதுநிலையினர் எழுத்தாளர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.
நிகழ்வுகளாக….
சிறப்பு நிகழ்வாக
இறுவட்டு மற்றும் நூல்வெளியீட்டுரையினை அருட்திரு. தமிழ்நேசன் அடிகளார் நிகழ்த்தியதோடு மேதகு இம்மானுவேல் பெனாண்டோ ஆண்டகை ஆயர் மன்னார் அவர்களின் கரங்களினால் வெளியீடு செய்து வைக்கப்பட்டது.
முதன்மைவிருந்தினர் உரையும் நிகழ்வின் நிறைவாக ஆசிரியர் ஏற்புரையோடு இனிதே நிறைவுற்றது.
மன்னார் மறைமாவட்ட கத்தோலிக்க குருவான அருட்திரு. தமிழ் நேசன் அடிகளார் மன்னார் மறைமாவட்டத்தின் சமூகத் தொடர்பு அருட்பணி மையமான ‘கலையருவி’ அமைப்பின் இயக்குனராகவும்ää ‘மன்னா’ என்ற கத்தோலிக்க மாதாந்தப் பத்திரிகையின் ஆசிரியராகவும் பணியாற்றுகின்றார். இன்னும் பல்வேறு கலை-இலக்கிய-சமூக அமைப்புக்களின் உறுப்பினராகவும் இவர் உள்ளார். அடிகளார் இதுவரை 10 நூல்களையும் 4 இறுவட்டுக்களையும் வெளிக்கொணர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நிகழ்ச்சி தொகுப்பினை S.A..ராதா பெனாண்டோ சிறப்பாக வழங்கினார்.
தொகுப்பு-வை.கஜேந்திரன்-

‘தமிழியல் தடங்கள்’நூலினதும் ‘அருளின் இராகங்கள்’ இறுவட்டினதும் வெளியீட்டு விழா-படங்கள்
Reviewed by Author
on
June 09, 2018
Rating:

No comments:
Post a Comment