அண்மைய செய்திகள்

recent
-

ஆண்மையை பெருக்கும் உலர் திராட்சை -


உலர் திராட்சையில் பல்வேறு பயன்கள் அடங்கியுள்ளன. நொறுக்கு தீனிகளை தவிர்த்து உலர் திராட்சை எடுத்து கொண்டால் ஆரோக்கியம் மேம்படும்.
உருவத்தில் சிறிய உலர்திராட்சைகள் சக்தியில் மிக பெரியதாக பார்க்கப்படுகிறது. முதுமையற்ற இளமை தோற்றம் வேண்டுவோர் உலர்திராட்சையை அதிகம் எடுத்துக் கொள்ளலாம்.
நார்ச்சத்துக்கள் விட்டமின்ஸ் மற்றும் அதிக கலோரிகள் அடங்கியது உலர்திராட்சை. அளவோடு சாப்பிட்டால் அதிகமாக பயன் பெற முடியும்.

ஜீரண சக்தி அதிகரிக்கும்
நார்சத்து அதிகமாக இருக்கும் உணவுகளில் உலர்திராட்சையும் ஒன்று. இதனை நீரில் ஊற வைத்தால் பெரியதாக விரிவாகும். இதில் மலமிளக்கி இருப்பதால் மலச்சிக்கலுக்கு நல்ல தீர்வளிக்கும்.
இதனை தொடர்ந்து உண்பதால் குடல் அசைவுகள் சீராகும். நச்சு மற்றும் கழிவுகளை நீக்கி தெளிவான உடலை கொடுக்கும்.

அசிடிட்டி குறையும்
உளர் திராட்சையின் பொட்டாசியம் மற்றும் மக்னேசிய சத்துக்கள் அசிடிட்டியை குறைக்க உதவி செய்கிறது. உடலில் இருந்து நச்சுக்களை விரைவாக வெளியேற்றும். சிறுநீரகம், நுரையீரல், மூட்டுக்கள் போன்றவற்றை பாதுகாத்து நோய்கள் வராமல் காக்கும்.

ரத்த சோகை நீங்கும்
இரும்பு மற்றும் வைட்டமின் பி சத்துக்கள் உலர்திராட்சையில் அதிகம் இருக்கின்றன. இதில் உள்ள காப்பர் ரத்தத்தில் சிவப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் ஆகவே ரத்த சோகை பிரச்னை இருப்பவர்களுக்கு அருமருந்து உலர்த்திராட்சை.

புற்று நோய்க்கு அருமருந்து
கேட்சிங் என்கிற மூல பொருள் உளர் திராட்சையில் அதிகம் இருப்பதால் புற்று நோய் சமயங்களில் ஏற்படும் கதிர்வீச்சிலிருந்து பாதுகாக்கும். மேலும் இது பெருங்குடலில் கட்டிகள் ஏற்படாமல் காப்பதால் புற்று நோய் அபாயத்திலிருந்து நம்மை காக்கிறது.

தாம்பத்ய பலவீனம் நீங்கும்
உலர்த்ராட்சை சாப்பிடுவதன் மூலம் தாம்பத்யத்தை இனிமையாக்கி கொள்ள முடியும். இதில் உள்ள அர்ஜினனி என்னும் அமினோ அமிலம் லிபிடோவை அதிகரிக்க செய்கிறது. அதனால் தாம்பத்ய நேரங்களில் இனிமை தருகிறது. ஆண்களின் விந்தணு பிரச்னைகளுக்கு நல்ல தீர்வாக உலர்திராட்சைகள் இருக்கின்றது.
உலர்திராட்சையை பாலில் கொதிக்க வைத்து குங்கமப்பூ சேர்த்து சாப்பிட்டு வந்தால் பலன் இரட்டிப்பாகும்.

உடல் எடை
மெலிந்த உடல்வாகு உள்ளவர்கள் தினமும் உலர்த்திராட்சை சாப்பிடுவதன் மூலம் உடல் எடையை அதிகரிக்க முடியும். க்ளுகோஸ் மற்றும் பிரூக்ட்டோஸ் அதிகமாக இருப்பதால் அதிக சக்தி தரும் உலர்திராட்சை கொழுப்பின்றி உடல் எடை ஏற உதவி செய்கிறது.

தோல்
உலர்திராட்சையின் மூலம் சருமம் பலவகையான நன்மைகளை பெறுகிறது. சருமத்தில் இருக்கும் செல்களின் அழிவை இது கட்டுப்படுத்துகிறது. ஆகவே முதுமை தோற்றம், தோல் சுருக்கம் போன்றவைகளை நீக்கி இளமையை தக்க வைக்கும் தன்மை உலர் திராட்சைக்கு இருக்கிறது.

ஆண்மையை பெருக்கும் உலர் திராட்சை - Reviewed by Author on June 05, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.