சைகை மொழி கற்ற கோகோ கொரில்லா மரணம்
உலகப் புகழ்பெற்ற சைகை மொழியைக் கற்ற கொரில்லாவான கோகோ 46 வயதில் உயிரிழந்துள்ளது.
பெண் கொரில்லாவான கோகோ பல்வேறு ஆவணப்படங்களில் தோன்றி உலகம் முழுவதும் பிரபலமானது.
நேஷனல் ஜியோகிராஃபிக் இதழின் அட்டைப் படத்தில் இரண்டு முறை இடம்பெற்றது. அந்த பத்திரிகையின் அக்டோபர் 1978 மற்றும் ஜனவரி 1985 ஆகிய இதழ்கள் கோகோவின் படத்தைத் தாங்கி வெளியாகின.
அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவில் உள்ள மிருகக் காட்சி சாலையில் வசித்த இந்த கொரில்லா வியாழக்கிழமை தூக்கத்திலேயே உயிரிழந்ததாக கொரில்லா அறக்கட்டளை கூறியுள்ளது.
கோகோவின் மரணத்திற்கு உலகம் முழுவதும் உள்ள விலங்கின ஆர்வலர்கள் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.

சைகை மொழி கற்ற கோகோ கொரில்லா மரணம்
Reviewed by Author
on
June 22, 2018
Rating:

No comments:
Post a Comment