அண்மைய செய்திகள்

recent
-

லண்டனில் நடந்த துப்பாக்கிச் சூடு: மகனின் பாதி முகம் சேதமடைந்துவிட்டதாக தாய் வேதனை -


லண்டனில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் மகனின் முகம் பாதி சேதமடைந்துவிட்டதாக தாய் மிகுந்த வேதனையுடன் கூறியுள்ளார்.
பிரித்தானியாவின் தலைநகரான லண்டனின் Peckham பகுதியில் கடந்த சனிக்கிழமை இரவு உள்ளூர் நேரப்படி 8 மனிக்கு நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் மிகவும் மோசமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகின.

இந்நிலையில் பாதிக்கப்பட்ட நபர் யார் என்பது குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளது. அவரின் பெயர் Oluwafemi Omosuy எனவும் 22 வயதான இவர் ஒரு பாக்சர் என்று கூறப்படுகிறது.
சம்பவ தினத்தன்று இவர் நீல நிற Ford Focus காரில் தன் நண்பர்களுடன் அமர்ந்து பேசிக் கொண்டிருந்த போது இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
இது குறித்து அவரின் தாயார் Stella Aldetam(53) கூறுகையில், Oluwafemi Omosuy சனிக்கிழமை பிற்பகல் வீட்டை விட்டு தன் நண்பர்களுடன் வெளியே சென்றான்.
அதன் பின் இது போன்ற சம்பவம் நிகழ்ந்துவிட்டதாக எனக்கு தகவல் வந்ததால் அதிர்ச்சியடைந்தேன். இதைத் தொடர்ந்து என் மகனை பார்த்த போது அவனது முகம் இரத்த வழிந்த நிலையில் பாதி சேதமடைந்து இருந்தது.

உடன் இருந்த அவனது நண்பர்களுக்கும் சிறிய அளவிலான காயம் ஏற்பட்டுள்ளது. என் மகனுக்கு யாருடனும் விரோதம் இல்லை, அவனுக்கு எதிரிகளும் கிடையாது.
இருப்பினும் கடந்த ஆண்டு இரண்டு பேர் என் மகனை கத்தியால் குத்தினர். அவர்கள் தான் இந்த சம்பவத்தையும் செய்திருக்கலாம்.
கருப்பு நிறத்தில் இருக்கும் அவர்கள் என் மகனுக்கு தொந்தரவாகவே உள்ளனர். இதனால் பொலிசார் அவர்களை விரைவில் கைது செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார்.
மேலும் என் மகன் கூடிய விரைவில் நலம் பெற வேண்டும் என்று கடவுளை வேண்டிக் கொள்வதாகவும் கண்ணீர் சிந்தியுள்ளார்.
தற்போது வரை இது தொடர்பாக பொலிசார் யாரையும் கைது செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
லண்டனில் நடந்த துப்பாக்கிச் சூடு: மகனின் பாதி முகம் சேதமடைந்துவிட்டதாக தாய் வேதனை - Reviewed by Author on June 04, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.