அண்மைய செய்திகள்

recent
-

இந்தப் புத்தகத்தை விற்பனை செய்யக்கூடாது? அச்சுறுத்திய இராணுவ புலனாய்வாளர்கள் -


கிளிநொச்சியில் உள்ள புத்தகசாலை ஒன்றுக்கு சென்றுள்ள இலங்கை இராணுவ புலனாய்வாளர்கள் ஈழத்து எழுத்தாளர் தீபச்செல்வன் எழுதிய தமிழர் பூமி புத்தகத்தை விற்பனை செய்யக்கூடாது என்று அச்சுறுத்தியுள்ளதாக தெரியவருகிறது.

குறித்த புத்தகத்தில் ஒரு பிரதியை தமக்கு வழங்குமாறும் கேட்டுள்ளதுடன், எத்தனை பிரதிகள் வந்தன என்றும், எத்தனை பிரதிகள் விற்பனை ஆகின என்பது பற்றிய தகவல்களை தமக்கு அளிக்க வேண்டும் என்றும் அவர்கள் கேட்டுள்ளனர்.
இதேவேளை கடந்த ஆண்டு இந்தப் புத்தகம் தபால் வழியாக இலங்கைக்கு அனுப்பப்பட்டபோது, இலங்கை சுங்கப் பிரிவினரால் தடுத்து வைக்கப்பட்டு விசாரணையின் பின்னர் வழங்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

நில ஆக்கிரமிப்பின் அரசியல் குறித்தும், வரலாற்றில் அபகரிக்கப்பட்டு அடையாள அழிப்பு செய்யப்பட்ட நிலங்கள் குறித்தும் குறிப்பிடும் இந்த நூல், 2009இற்கு பின் ஈழத்தில் முன்னெடுக்கப்பட்ட அரச, இராணுவ நில ஆக்கிரமிப்புக்கள் மற்றும் அதற்கெதிரான தன்னெழுச்சிப் போராட்டங்கள் குறித்தும் தமிழர் பூமி புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்தப் புத்தகத்தை விற்பனை செய்யக்கூடாது? அச்சுறுத்திய இராணுவ புலனாய்வாளர்கள் - Reviewed by Author on June 04, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.