வெளிமாவட்ட மீனவர்களினால் உள்ளூர் மீனவர்கள் பாதிப்பு -
குறித்த பகுதியில் தொழில் செய்வதற்குறிய அனுமதி பெற்றுக்கொள்ளாத நிலையில் பல நூற்றுக்காணக்கானோர் தொழில் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக அந்த பகுதி மீனவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இவ்வாறு சட்டவிரோத தொழில் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதால் தமது வாழ்வாதாரம் பாதிக்கபட்டுள்ளதாக அவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
இதேவேளை வெளிமாவட்டத்தில் இருந்து நாயாறு முகத்துவாரப் பகுதிக்கு இடம்பெயர்ந்து சென்ற 78 மீனவகுடும்பங்கள் அனுமதியுடன் தொழில் செய்துவருகின்றனர்.
மேலும், அனுமதியின்றி அதிகளவிளான வெளிமாவட்ட மீனவர்கள் அங்குவந்து மீன்பிடித்தொழில் மேற்கொள்வதாகவும் இதனால் உள்ளூர் மீனவர்களுக்கும் தமக்கும் இடையிலான இன, ஒற்றுமை சீரற்று காணப்படுவது கவலையளிப்பதாக அனுமதிபெற்ற வெளிமாவட்ட மீனவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
வெளிமாவட்ட மீனவர்களினால் உள்ளூர் மீனவர்கள் பாதிப்பு -
Reviewed by Author
on
June 13, 2018
Rating:

No comments:
Post a Comment