சாதனை படைத்த ரொனால்டோ -
பீபா உலக கிண்ணம் தொடரில் நடைபெற்ற ‘பி’ பிரிவு போட்டியில், பலம் வாய்ந்த போர்த்துகல் அணி, தரவரிசையில் 41வது இடத்தில் இருக்கும் மொராக்கோ அணியை எதிர்கொண்டது.
இந்தப் போட்டியில், போர்த்துகல் அணியின் நட்சத்திர வீரரும் அந்த அணியின் தலைவருமான ரொனால்டோ ஆட்டத்தின் 4வது நிமிடத்தில்,கார்னரிலிருந்து அடிக்கப்பட்ட பந்தை ஹெட்டர் மூலம் அற்புதமான கோலாக மாற்றினார். இந்தக் கோலின் மூலம், போர்த்துகல் அணி ஆட்டத்தில் 1-0 என்ற முன்னிலை பெற்றது.
இந்நிலையில், இந்த கோல் மூலம் ரொனால்டோ சர்வதேச போட்டிகளில் தனது 85வது கோலைப் பதிவு செய்தார். மேலும், உலகில் அதிக கோல் அடித்த வீரர்கள் பட்டியலில் இரண்டாம் இடத்தைப் பிடித்தார்.
மேலும், 84 கோல்கள் அடித்து ஐரோப்பிய வீரர்களில் அதிக கோல்கள் அடித்த பெரன்க் புஸ்காஸின் சாதனையை முறியடித்துள்ளார்.
உலகில் அதிக கோல் அடித்த வீரர்கள் பட்டியலில் ஈரான் நாட்டைச் சேர்ந்த அலி தாயி 109 கோல்களுடன் முதலிடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சாதனை படைத்த ரொனால்டோ -
Reviewed by Author
on
June 21, 2018
Rating:
Reviewed by Author
on
June 21, 2018
Rating:


No comments:
Post a Comment