அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் விடத்தல் தீவு தூய ஜோசப்வாஸ் ம.வி பாடசாலையில் காணப்பட்ட 26 குளவிக்கூடுகளும் முழுமையாக அழிப்பு-படம்

மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட விடத்தல் தீவு தூய ஜோசப்வாஸ் ம.வி பாடசாலையில் கடந்த சில மாதங்களாக குளவிகளின் தாக்கம் அதிகரித்த நிலையில் மன்னார் மாவட்ட அனார்த்த முகாமைத்தவ பிரிவின் முயற்சியினால் நேற்று(2) திங்கட்கிழமை இரவு முதல் இன்று (3) செவ்வாய்க்கிழமை அதிகாலை வரை மேற்கொண்ட கடும் முயற்சியின் காரணமாக குறித்த 26 குளவிக்கூடுகளும் முழுமையாக அழிக்கப்பட்டுள்ளது.

விடத்தல் தீவு தூய ஜோசப்வாஸ் ம.வி பாடசாலையில் கடந்த சில மாதங்களாக குளவிகளின் தாக்கம் மற்றும் பெருக்கம் அதிகரித்த நிலையில் பாடசாலை கட்டிடங்களில் சுமார் 26 குளவிக்கூடுகள் காணப்பட்டுள்ளது.

-இதனால் பாடசாலை மாணவர்கள் தொடர்ச்சியாக குளவிகளின் தாக்குதல்களுக்கு இலக்காகியுள்ளனர்.
-தற்போது வரை 8 மாணவர்கள் குளவிகளின் தாக்குதல்களுக்கு உள்ளாகியதோடு,ஒரு மாணவனக்கு 95 குளவிகள் கொட்டிய நிலையும் காணப்பட்டுள்ளது.

-குறித்த பிரச்சினை தொடர்பாக பாடசாலை நிர்வாகம் மடு கல்விப்பணிப்பாளர் மற்றும் மன்னார் மாவட்ட அனார்த்த முகாமைத்துவப் பிரிவு ஆகியவற்றிற்கு முறைப்பாடு செய்திருந்தனர்.

-இந்த நிலையில் நேற்று   திங்கட்கிழமை (2) காலை பாடசாலைக்குச் சென்ற மாணவன் ஒருவர் குளவிகளின் தாக்குதல்களுக்கு உள்ளாகியுள்ளார்.

குறித்த சம்பவம் பெற்றோர்களுக்கு தெரிந்த நிலையில் நேற்று திங்கட்கிழமை காலை பாடசாலைக்குச் சென்ற மாணவர்களை பெற்றோர் பாடசாலைக்குச் சென்று மீளவும் வீடுகளுக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

-இந்த நிலையில் நேற்று திங்கட்கிழமை(2) இரவு 9 மணியளவில் மன்னார் மாவட்ட அனார்த்த முகாமைத்துவ பிரிவு யாழ் மாநகர சபையின் தீயணை பிரிவினரின் உதவியுடன் குறித்த 26 குளவிக்கூடுகளையும் அழிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

அவர்களுக்கு ஆதரவாக பொலிஸார் மற்றும் பாடசாலை மாணவர்களின் பெற்றோரும் , பாடசாலை சமூகத்தினரும் செயல் பட்டனர்.

நேற்று திங்கட்கிழமை இரவு 9 மணியளவில் குளவிக்கூடுகளை அழிக்கும் நடவடிக்கை ஆரம்பமாகி இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை 1 மணியளவில் நிறைவடைந்துள்ளனது.

-சுமார் 4  மணித்தியாளங்கள்  மேற்கொண்ட முயற்சியில் பலனாக குறித்த குளவிக்கூடுகள் 26 உம் முழுமையாக அழிக்கப்பட்டுள்ளது.

மன்னார் மாவட்டத்தில் தீயணைப்பு பிரிவு இல்லாத காரணத்தினாலேயே குறிப்பிட்ட காலத்தில் குறித்த நடவடிக்கையினை மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டிருந்ததாகவும் தெரிய வருகின்றது.
 









மன்னார் விடத்தல் தீவு தூய ஜோசப்வாஸ் ம.வி பாடசாலையில் காணப்பட்ட 26 குளவிக்கூடுகளும் முழுமையாக அழிப்பு-படம் Reviewed by Author on July 04, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.