இன்று....இந்தஆண்டின்மிகப்பெரிய சந்திர கிரகணம் !!!
இந்தஆண்டின்மிகப்பெரிய சந்திர கிரகணம் !!
🌕 இந்த ஆண்டின் மிகப்பெரிய சந்திர கிரகணம் வரும் விளம்பி வருடம் ஆடி மாதம் 11ம்நாள் ஜூலை 27ஆம் தேதி வெள்ளிக்கிழமை உத்திராடம், திருவோணம் நட்சத்திரங்களில் நிகழ இருக்கிறது.
🌕 அன்றைய தினத்தில் நிலவை சுற்றி சிகப்பு நிற வளையம் தோன்றும் என்பதால் ரெட் மூன் என அழைக்கப்படுகிறது.
🌕 கிரகணம் ஏற்படும் நாளில் பௌர்ணமி வருவதால் இந்த நாள் மேலும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது.
*சந்திர கிரகணம்*
🌕 சந்திரன் பூமியின் பின்னால் கடந்து செல்லும் போது, சூரியனின் கதிர்களை நிலவின் மீது படுவதிலிருந்து பூமி மறைத்துவிடுவதால் சந்திர கிரகணம் ஏற்படுகிறது.
🌕 சூரியன், பூமி, நிலவு ஆகியவை மிகத் துல்லியமாகவோ அல்லது ஏறத்தாழவோ, ஒரே வரிசையில் வரும்போது மட்டுமே சந்திர கிரகணம் ஏற்படும்.
மிகப்பெரிய சந்திர கிரகணம் :
🌕 இந்த ஆண்டின் மிக நீளமான இந்த சந்திர கிரகணத்தை இந்தியாவின் அனைத்து பகுதிகளில் உள்ளவர்களும் கண்டு ரசிக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
🌕 சந்திர கிரகணம் ஆரம்ப காலம் இரவு 11.54 மணி
🌕 சந்திர கிரகணம் மத்திம காலம் இரவு 01.52 மணி
🌕 சந்திர கிரகணம் முடிவு காலம் இரவு 3.49 மணி
*கோவில்*
🌕 சந்திர கிரகணத்தை முன்னிட்டு வரும் 27ஆம் தேதியன்று, திருப்பதி கோவில் 12 மணிநேரம் மூடப்பட உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
🌕 கிரகண நேரத்தில் அனைத்து கோவில்களின் நடை சாத்தப்படும். கிரகணம் முடிந்த உடன், கோவிலை சுத்தம் செய்த பின்னர் மீண்டும் நடை திறக்கப்படும்.
🌕 இதேபோன்று வீட்டில் உள்ளவர்களும் கிரகண நேரத்தில் பொதுவாக எந்த செயலையும் செய்ய மாட்டார்கள். குறிப்பாக உயிர்வதை, காய்கனி நறுக்குவது ஆகாது. மனதில் கெட்ட விஷயங்கள் நினைப்பது கூடாது. தியானம் - மந்திர ஜெபங்கள் செய்வது நன்மை. கிரகணம் முடிந்த பின் வீடு முழுக்க சுத்தம் செய்தபின் புதிதாக சமைத்த உணவை உட்கொள்வார்கள்.
*வெள்ளிக்கிழமை இரவு 7.00 மணிக்குள் சாப்பாடு முடித்துக்கொள்ள வேண்டும்.*
*பெளர்ணமி திதி ச்ரார்த்தம் மறு நாள் சனிக்கிழமை செய்யவேண்டும்.*.
*பூராடம், கார்த்திகை, உத்திரம், உத்ராடம், திருவோணம், ரோஹிணி, ஹஸ்தம், அவிட்டம் ஆகிய நட்சத்திரத்தில் பிறந்தவர்களும், ரிஷபம்-கன்னி-மகரம் ராசியில் பிறந்தவர்களும் மறு நாள் சனிக்கிழமை சாந்தி செய்துகொள்ளவும்.*
*கர்ப்பிணிஸ்திரிகள் வெள்ளிக்கிழமை இரவு 11.50 முதல் இரவு 3.55 வரைசந்திரனை பார்க்க கூடாது*
சுவாமி படங்கள், பூஜை பொருட்கள், அரிசி, தண்ணீர், மறுபடியும் பயன்படுத்தக்கூடிய மாவு இவற்றில் தர்ப்பை வைக்கவும்.
இன்று....இந்தஆண்டின்மிகப்பெரிய சந்திர கிரகணம் !!!
Reviewed by Author
on
July 27, 2018
Rating:

No comments:
Post a Comment