சிறார் ஆபாசப்படங்கள் வைத்திருந்தால் 5 ஆண்டு சிறைத்தண்டனை!
சமீப காலமாகவே நாடு முழுவதும் சிறார்கள் மற்றும் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்த வண்ணம் உள்ளன. இதனை தடுப்பதற்கான நடவடிக்கைகள் ஒருபக்கம் மேற்கொள்ளப்பட்டாலும், காமுகர்கள் தொடர்ந்து தங்களது காம வேட்டைகளை நடத்திய வண்ணமே உள்ளனர்.
பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் கடந்த சில மாதங்களாகவே இதனை தடுப்பதகான வழிகளை, ஆராய்ந்து வந்த நிலையில், 2012-ல் கொண்டுவரப்பட்ட சட்டத்தில் புதிய மாற்றங்களை கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
அதன்படி இனிமேல் சிறார்கள் தொடர்பான ஆபாசப்படங்களை, வைத்திருந்தாலோ அல்லது விற்றாலோ அவர்களுக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்படும் என அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சிறார் ஆபாசப்படங்கள் வைத்திருந்தால் 5 ஆண்டு சிறைத்தண்டனை!
Reviewed by Author
on
July 09, 2018
Rating:

No comments:
Post a Comment