வடக்கில் அதிகரித்துள்ள ஹெரோயின் போதைப்பொருள் பாவனை
வடக்கு மாகாணத்தில் ஹெரோயின் போதைப்பொருள் பாவனை அதிகரித்துள்ளதாக அமைச்சர் சரத் அமுனுகம தெரிவித்துள்ளார்.
இதனால், வடக்கில் செயற்படுத்தப்படும் பாதுகாப்பு வேலைத்திட்டங்களை மேலும் வலுப்படுத்த வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.
கண்டியில் ஊடகங்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். மேலும் தெரிவிக்கையில்,
வடக்கில் ஹெரோயின் போதைப்பொருளை பாவனை துரிதமாக அதிகரித்துள்ளது.
இந்த நிலைமைகளை கட்டுப்படுத்த துரிதமான வேலைத்திட்டம் ஒன்றை முன்னெடுக்காது போனால், பல பிரச்சினைகள் ஏற்படக் கூடும் எனவும் அமைச்சர் சரத் அமுனுகம சுட்டிக்காட்டியுள்ளார்.
வடக்கில் அதிகரித்துள்ள ஹெரோயின் போதைப்பொருள் பாவனை
Reviewed by Author
on
July 09, 2018
Rating:

No comments:
Post a Comment