அண்மைய செய்திகள்

recent
-

இந்திய அணியில் இடம் பிடித்துள்ள தமிழன் தினேஷ்கார்த்திக்


இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் இந்திய அணியில் இடம் பிடித்துள்ள தமிழக வீரர் தினேஷ் கார்த்திக்கிற்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.
கோஹ்லி தலைமையிலான இந்திய அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, அங்கு டி20. ஒருநாள் போட்டிகள் மற்றும் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.

இதில் டி20 தொடரை இந்திய அணியும், ஒருநாள் தொடரை இங்கிலாந்து அணியும் கைப்பற்றியுள்ள நிலையில், இரு அணிகளுக்கிடையேயான டெஸ்ட் தொடர் அடுத்த மாதம் துவங்கவுள்ளது.
டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் சகாவிற்கு காயம் ஏற்பட்டதால், அவருக்கு பதிலாக தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் இடம் பெற்றார்.
டெஸ்ட் தொடருக்கு முன்னதாக 3 நாள் பயிற்சி ஆட்டம் நடைப்பெறுகிறது. இதில் முதலில் விளையாடிய இந்திய அணிக்கு முதல் 3 ஓவரில் தவான் 0, புஜாரா 1 ரன்னில் விக்கெட்டை பறிகொடுத்தனர்.
முரளி விஜய் 53, ரஹானே 17 எடுத்து விக்கெட்டை இழக்க பின்னர் வந்த கோஹ்லி 68, கேஎல் ராகுல் 58 என அரைசதம் கடந்து அணியை மீட்டனர்.



கோஹ்லி அவுட்டான பின் காயமடைந்த சஹாவுக்கு பதிலாக அணியில் சேர்க்கப்பட்ட தினேஷ் கார்த்திக் களமிறங்கினார். அவர் 94 பந்தில் 15 பவுண்டரிகள் விளாசி 82 ஓட்டங்கள் குவித்தார். ஹர்திக் 33 ஓட்டங்கள் குவித்தார். இதன் மூலம் தொடக்கத்தில் தடுமாறினாலும், முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்தியா 6 விக்கெட் இழந்து 322 ஓட்டங்களை குவித்தது.
இந்நிலையில் பயிற்சி ஆட்டத்தில் அபாரமாக விளையாடிய தமிழக வீரர் தினேஷ் கார்த்திக்கிற்கு டுவிட்டரில் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. அதில் ஒருவர் தினேஷ் கார்த்திக்கில் சாகா வெறும் 10 சதவீதம் தான் என்று கூறியுள்ளார்.
இந்திய அணியில் இடம் பிடித்துள்ள தமிழன் தினேஷ்கார்த்திக் Reviewed by Author on July 27, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.