வவுனியாவில் இடம்பெற்ற விபத்தில் பாடசாலை மாணவன் உயிரிழப்பு -
இவ்விடயம் குறித்து மேலும் தெரியவருகையில், இன்று பிற்பகல் புளியங்குளம் பகுதியில் பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற முச்சக்கரவண்டி, கொழும்பிலிருந்து யாழப்பாணம் நோக்கிச் சென்ற இ.போ.ச பேருந்துடன் மோதியுள்ளது.
இவ்விபத்தில் முச்சக்கரவண்டி சாரதி உட்பட 10 பேர் புளியங்குளம் பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிக்சைக்காக வவுனியா பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டனர். இவ்விபத்தில் படுகாயமடைந்து சிகிச்சையளிக்கப்பட்டு வந்த புளியங்குளம் பகுதியை சேர்ந்த 8 வயதான அபிஷேக் என்ற மாணவன் சிகிச்சை பலனின்றி இன்று பிற்பகல் உயிரிழந்தள்ளதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இவ்விபத்து தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார், இ.போ.ச பேருந்து முந்திச் செல்ல முற்பட்டபோதே இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளதுடன், இ.போ.ச சாரதியை கைது செய்யப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.வவுனியாவில் கோர விபத்து! இருவர் கவலைக்கிடம் - எட்டு மாணவர்கள் படுகாயம்.
வவுனியாவில் இடம்பெற்ற விபத்தில் பாடசாலை மாணவன் உயிரிழப்பு -
Reviewed by Author
on
July 31, 2018
Rating:

No comments:
Post a Comment