நீங்கள் குண்டாவதற்கு இது தான் காரணம்!
ஒல்லியாக இருப்பது அழகுதான். ஆனால் அதற்கும் ஒரு அளவு உண்டு. ஒடிந்து விழுகிற மாதிரியான ஒல்லியான தேகத்தை யாருமே விரும்பமாட்டார்கள்.
குண்டாக இருந்தாலும் ஓடி, ஆடி ஆக்டிவாக இருந்தால் உடல் பருமனும் உங்களுக்கு ஒரு தொல்லை போல் தெரியாது.
அப்படி நீங்கள் சாப்பிடும் எந்த உணவு உங்களை குண்டாக்குகிறது என்று உங்களுக்கு தெரியுமா?
- மூன்று வேளை அரிசி உணவு. இடையிடையே நொறுக்குத்தீனி. சாயங்காலத்தில் லைட்டாக பசிக்கிறது என்று ஜங்க் புட்.
- காலை, மதியம், இரவு மூன்று வேளை அதிக அளவில் உணவை உட்கொள்வதற்குப் பதில், இரண்டு முதல் மூன்று மணி நேர இடைவெளியில் கொஞ்சம் கொஞ்சமாக எடுத்துக்கொள்ள வேண்டும்.
- இட்லி, தோசை, புட்டு ஆகிய பாரம்பரிய உணவுப் பண்டங்கள் ஒதுக்கப்பட்டு பீட்சா, ப்ரென்ச் ப்ரை, பர்கர் என பலவிதமான துரித உணவுவுகள் உடல் எடையை பெருமளவில் அதிகரிக்க செய்கின்றன.
- மைதா, கொழுப்பு சத்து அதிகமாக உள்ள உணவுகள். அதுமட்டுமில்லாமல், இந்த உணவில் சேர்க்கப்படும் பாலாடைக்கட்டி கொழுப்பின் அளவு அதிகரிக்க வழி செய்கிறது.
- மில்க் ஷேக்கில் கொலஸ்ட்ரால் ஏராளமாக இருக்கிறது.உணவகங்களில், நூடுல்ஸ், பீட்சா, பர்கர் என சாப்பிடும்போது குளிர்பானங்களையும் குடிக்கின்றனர். இதுவும் உடல் எடைக்கு ஒரு காரணம்.
நீங்கள் குண்டாவதற்கு இது தான் காரணம்!
Reviewed by Author
on
July 07, 2018
Rating:

No comments:
Post a Comment