தேவையானவர்களுக்கு கிடைப்பதில்லை என பாதிக்கப்பட்டவர்கள் கவலை...
மன்னார் மாவட்டத்தில் வீட்டுத்திட்டம் தேவையானவர்களுக்கு கிடைப்பதில்லை என பாதிக்கப்பட்டவர்கள் கவலை...
மன்னார்மாவட்டத்தினைப்பொறுத்தவரையில் தற்போது பல்வேறுவகையான அபிவிருத்தி செயற்பாடுகள் நடைபெற்றுக்கொண்டு இருக்கின்றது. மகிழ்ச்சியான விடையம்
ஆனாலும் தகுதியானவர்களுக்கும் தேவையுடையேருக்கும் கிடைக்கின்றதா என்றால் அது கேள்விக்குறியே…
- வீட்டுத்திட்டம்
- கொடுப்பனவுகள்
- காணிகள்
- நிவாரணங்கள்
- தேவையுடையோர்
- விசேட தேவையுடையோர்
- அவசரமானதேவையுடையவர்கள் என்று நோக்கலாம் அப்படியாயின் யாருக்கு முன்னுரிமை அளிப்பது என்பது சந்தேகமே இல்லை…
சாந்திபுரம் கிராமத்தின் வசிக்கும் ளு.அந்தோனி வயது 75 கூலித்தொழிலாளி மனைவி அ.ராமாயி வயது 63 இருவரும் வீடின்றி இன்னொருவர் வீட்டில் வாழ்ந்து வருகின்றனர்.
100வீட்டுத்திட்டத்தின் மூலம் கிடைக்கப்பெற்ற வீட்டில் சுமார் 16 வருடங்கள் வாழ்ந்து வந்தபோதும் கடந்த 04 வருடங்களுக்கு முன்பு மழையினாலும் கடல் காற்றினாலும் ஏற்பட்ட பாதிப்பினால் வீடு இடிந்து விழுந்துள்ளது.
அன்றிலிருந்து இன்றுவரை வீடின்றி மகள் முறையான இன்னொருவரின் வீட்டில் வசிக்கின்றனர்.
இவ்வீட்டினை திருத்த வேலைகள் செய்து தருமாறு கிராம அலுவலர் மற்றும் சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை கதைத்தும் கடிதம் வழங்கியும் இதுவரை எந்த செயற்பாடும் நடக்கவில்லை என்பதால் மிகவும் கவலையும் காணப்படுகின்றார்.
அன்றாடம் கூலி வேலை செய்தே தமது வாழ்வாதாரத்தினை கவனிக்கும் இருவருக்கும் இருக்க ஒரு வீடில்லை அதனால் கூரை இடிந்து கிடக்கின்ற அந்த வீட்டினை திருத்தி கூரையமைத்து வாழ்வதற்கு வழியமைத்து தருமாறு கிராம அலுவலர் மற்றும் சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் மன்றாட்டமாக வேண்டிநிற்கின்றேன்…
இவரின் கோரிக்கையினை சம்மந்தப்பட்ட அதிகாரிகள் செவிமடுத்து மிகவிரைவில் அந்த முதுமையிலும் வறுமையிலும் வாடும் ஏழைக்குடும்பத்திற்கு உதவி செய்ய அதிகாரிகள் முன்வரவேண்டும் என்பதே எமதும் ஏனையோரின் எதிர்பார்ப்பாகும்.
இங்கே சுட்டிக்காட்டப்பட்டவர் ஒருவர்தான் இன்னும் பலர் இதேபோன்று பல பிரச்சினைகளுடன் வாழ்ந்து கொண்டு இருக்கின்றார்கள் அவர்களை இனம்கண்டு உண்மை நிலையறிந்து உதவிட முன்வரவேண்டும் அரச அதிகாரிகள்….
செல்வாக்கிற்கும் அரசியலுக்கும் பணத்திற்கும் அப்பால் சேவைதான் தற்போது நமக்கு தேவையாகவுள்ளது.
இருப்பதை இல்லாதவர்களுக்கு பகிர்ந்துகொள்வோம்-

தேவையானவர்களுக்கு கிடைப்பதில்லை என பாதிக்கப்பட்டவர்கள் கவலை...
Reviewed by Author
on
July 07, 2018
Rating:

No comments:
Post a Comment