மன்னார் மடுவில் சித்த மத்திய மருந்தகம் திறந்து வைப்பு -
மாகாண சுதேச வைத்திய திணைக்களத்தினால் மன்னார் மடு பிரதேசத்தில் அமைக்கப்பட்ட 'மடு சித்த மத்திய மருந்தகம்' திறந்து வைக்கப்பட்டுள்ளது.
குறித்த நிகழ்வு இன்று காலை 11 மணியளவில் இடம்பெற்றுள்ளது. இந்த சித்த மத்திய மருந்தகத்தை வடமாகாண சுகாதார அமைச்சர் ஜீ.குணசீலன் திறந்து வைத்துள்ளார்.
மாகாணத்திற்கென குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்தி நிதியின் கீழ் சுமார் 11 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில் இந்த சித்த மத்திய மருந்தகம் அமைக்கப்பட்டது.
மேலும், நிகழ்வில் மடு திருத்தல பரிபாலகர் அருட்தந்தை எஸ்.எமிலியான்ஸ் பிள்ளை, மடு பிரதேசச் செயலாளர், மாகாண சுதேச வைத்திய திணைக்கள உதவி ஆணையாளர் உட்பட பலரும் கலந்து கொண்டுள்ளனர்.
மன்னார் மடுவில் சித்த மத்திய மருந்தகம் திறந்து வைப்பு -
Reviewed by Author
on
July 03, 2018
Rating:

No comments:
Post a Comment