தமிழ்த் தேசிய இனத்தின் அடையாளமாக இருப்பது கலைகளே சிறீதரன் எம்.பி -
தமிழ்த்தேசிய இனத்தின் அடையாளமாக இருப்பது கலைகளே என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி, முழங்காவில் மகா வித்தியாலயத்தில் இடம்பெற்ற பேசும் தூரிகை ஓவியக் கண்காட்சியை ஆரம்பித்து வைத்து உரையாற்றுகையிலே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
தொடர்ந்தும் அவர் கருத்து தெரிவிக்கையில்,
கலைகள் என்பது மனித மனங்களை ஆழமாக ஊடுருவிச் செல்வதே கலைகள் ஆகும்.கலை என்பது தேசிய இனத்தின் அடையாளம்.
அவ்வாறான கலைகளுக்குரிய தேசிய அடையாளங்களைக்கொண்டவர்கள் தான் தமிழர்களாகிய நாங்கள் இசைக்கலை, ஓவியக்கலை நாடகக்கலை நடனக்கலை கட்டிடக்கலை சிற்பக்கலை போன்ற நுண்கலைகளெல்லாம் தமிழர்களின் பாரம்பரிய வாழ்வோடு உருவாக்ககப்பட்டவை உருவாகி வந்தவை.
ஆகவே ஒரு இனத்தின் மிக முக்கியமாக கருதப்படுவது அவர்களின் தேசிய வாழ்வியலினுடைய மையங்களான கலைகளும் கலாச்சாரங்களும் பண்பாட்டு அடையாளங்களும் வாழ்வியல் விழுமியங்களும் நிலைபேறானதாக பேணப்படவேண்டுமாக இருந்தால் ஒரு தேசிய இனம் தமது கலைகளை இழக்கமுடியாது.
தமிழர்களின் இலக்கியகாலங்களில் பொற்காலமாக கருதப்படும் சோழர்காலத்தில் கலைகள் சிறப்புற்று இருந்தாலும் எம் பெரும் தலைவன் பிரபாகரன் காலத்தில் கலைகள் நவீனத்துவத்துடன் சிறந்து விளங்கியது.
அவ்வாறான கலைகளை பேணவேண்டும் என்பதற்காக முழங்காவில்த் தேசிய பாடசாலை மாணவர்களாகிய நீங்கள் உங்கள் தூரிகை கொண்டு எம் இனத்தின் அடையாளங்களை உங்கள் மனக்கண்ணில் உதித்தவாறு பதிப்பித்திருக்கிறீர்கள்.
அந்தப்பதிப்புக்கள் என்பது வரலாற்றினுடைய ஆழ் மன எண்ணங்களையும் ஆழ் மனதில் இருந்து தோன்றுகின்ற சிந்தனைகளையும் வெளிக்கொண்டு வருவது கலைகளே ஆகும்.
கலைகளிலேயே மனிதனை ஆறுதல்ப்படுத்துவனவாகவும், சிந்திக்கவைப்பனவாகவும் இருப்பன ஓவியக்கலை ஆகும். ஒரு கருத்தை விட ஒரு படம் ஆயிரம் செய்திகளைச்சொல்லும் என்பார்கள்.
இதேபோன்று உங்கள் தூரிகைகள் மூலம் வந்த படம் எத்தனையோ ஆயிரம் கருத்துக்களை எமக்கு சொல்கிறது.
மேலும், பேசும் தூரிகை ஓவியக்கண்காட்சியை நெறிப்படுத்திய ஆசிரியை பா.நதியாவுக்கு எனது மனப்பூரவமான வாழ்த்துக்கள் அவரை வழிப்படுத்திய அதிபர் ப.ஆனந்தராசாவுக்கு அவரோடு இணைந்த ஆசிரியர் குழாம் தங்கள் தூரிகையின் கூர் முனைகளால் ஓவியங்களுக்கு உயிர் கொடுத்த மாணவர்களுக்கும் எனது இதய பூர்வமான வாழ்த்துக்கள் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்த் தேசிய இனத்தின் அடையாளமாக இருப்பது கலைகளே சிறீதரன் எம்.பி -
Reviewed by Author
on
July 03, 2018
Rating:

No comments:
Post a Comment