மன்னார் பிரதேச கலாசார விழா மிகவும் சிறப்பாக இடம்பெற்றது
மன்னார் மாவட்ட பிரதேச கலாசார விழாவானது நகரசபை மண்டபத்தில் 12-07-2018 வியாழக்கிழமை மதியம் -2-00 மணிக்கு ஆரம்பமானது.
விருந்தினர்கள் இசைவாத்தியம் முழங்க சந்தன மாலை யணிவித்து வரவேற்புடன் மங்களவிளக்கேற்ராலுடன் தமிழ்மொழி வாழ்த்துடன் ஆரம்பமானது.
பிரதேச செயலாளர் திரு M.பரமதாசன் தலைமையில்
பிரதம விருந்தினராக
திரு சி.ஏ.மோகன்ராஸ் மாவட்ட அரசாங்க அதிபர்அவர்களும்
விஷேட விருந்தினர்களாக...
பொறியியலாளர் திரு த.யசோதரன் -தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை-மன்னார்
பொறியியலாளர் திரு.N.N.G.P. ரத்னாயக்க-மின்சார சபை மன்னார்
கௌரவ விருந்தினர்களாக....
மூத்த கலைஞர்களான திரு.அந்தோனி மிராண்டா
திரு.த.பர்னாந்து பீரீஸ் இவர்களுடன் அழைக்கப்பட்ட விருந்தினர்கள் அரச அதிகாரிகள் பிரதேச செயலக மற்றும் மாவட்ட செயலக அலுவலகர்கள் கலைஞர்கள் சுவைஞர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.
மன்னார் பிரதேச கலைஞர்களின் கலை நிகழ்வுகளாக நாட்டிய நடனங்கள்
நாடக நாட்டுக்கூத்துக்கள்,சிறப்பு பேச்சு,கவியரங்கம் அத்துடன் சிறப்பு நிகழ்வாக கவிஞர்.வை.கஜேந்திரன் மலராசிரியராக ஆறாவது இதழாக "மன்னல்" நூல் வெளியீடும்
விசேட நிகழ்வாக "கலைச்செம்மல்" விருது கலைஞர்கள் கௌரவிப்பு நிகழ்வும் இடம்பெற்றது.
2018 மன்னார் பிரதேச கலாசார விழா மிகவும் சிறப்பாக மாலை தமிழ்மொழி வாழ்த்துடன் நிகழ்ச்சி தொகுப்பினை ஜோசப் நயன் வழங்க இனிதே நிறைவுற்றது.

மன்னார் பிரதேச கலாசார விழா மிகவும் சிறப்பாக இடம்பெற்றது
Reviewed by Author
on
July 13, 2018
Rating:

No comments:
Post a Comment