அண்மைய செய்திகள்

recent
-

இந்த நகரத்தில் மழை நீருக்கும் வரி தெரியுமா? -


மழை நீருக்கும் வரி விதித்துள்ளது ரஷ்யாவில் உள்ள ஒரு நகரத்தைச் சேர்ந்த குடியிருப்புவாசிகளிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

ரஷ்யாவில் உள்ள Perm எனும் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வசிப்பவர்களுக்கு மின்சாரம், குடிநீர் போன்று மாதாந்திர பயன்பாட்டு கட்டணம் மொத்தமாக வசூலிக்கும் முறை அமலில் உள்ளது.

இந்நிலையில் கடந்த மே மாதம் முதல் கழிவுநீர் கட்டணம் என்ற பெயரில் புதிய கட்டணம் ஒன்று மாதாந்திர கட்டணத்தில் சேர்க்கப்பட்டிருந்ததைக் கண்ட குடியிருப்புவாசிகள் குழப்பமடைந்துள்ளனர்.
இது குறித்து சம்மந்தப்பட்ட அலுவலர்களிடம் கேள்வி எழுப்பிய போது இது மழைக்காலம் என்பதால் மொட்டை மாடியிலிருந்து வழிந்தோடி கழிவுநீர் தொட்டியில் மழைநீர் கலந்ததால் அதற்குரிய கட்டணம் மழை வரியாக வசூல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் கொடுத்துள்ளனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த குடியிருப்புவாசிகள் மழை நீருக்கும் வரியா என்று ஆதங்கம் அடைந்துள்ளனர்.
 ஒவ்வொரு வீடுகளில் இருந்தும் சேகரிக்கப்படும் கழிவுநீர் பைப்புகள் மூலம் கழிவுநீர் வடிகால் வழியாக செல்வதை தாங்கள் அறிவோம். ஆனால் மொட்டை மாடியில் சேகரிக்கப்படும் மழைநீர், தனியாக பைப்புகள் மூலமாக பூமிக்குள் செலுத்தப்படுவதாகவே அறிகிறோம்.
இது தொடர்பாக மாதாந்திர பயன்பாட்டு கட்டணம் வசூல் செய்யும் நிறுவனத்திடம் விளக்கம் கேட்ட போது இது முற்றிலும் சட்டப்பூர்வமாகவே வசூலிக்கப்படுகிறது என்றும் கழிவுநீர் வடிகாலில் செல்லும் கழிவுநீர் மற்றும் மழை நீர் ஆகியவை இரண்டுமே சமமாகவே கருதப்படும் என்றும் கூறியுள்ளனர்.

வேறுவழியின்றி இதனை ஏற்றுக்கொண்ட குடியிருப்புவாசிகள் இது மழைக்காலத்திற்கு மட்டும் வசூலிக்கப்படுமா அல்லது வருடம் முழுவதும் வசூல் செய்யப்படுமா என்று மேலும் குழப்பமடைந்துள்ளனர்.
மழை நீருக்காக வரி வசூல் செய்யப்படும் சம்பவம் நகர வாசிகள் இடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.


இந்த நகரத்தில் மழை நீருக்கும் வரி தெரியுமா? - Reviewed by Author on July 02, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.