அண்மைய செய்திகள்

recent
-

வரலாற்றில் முதல் முறையாக அழகி பட்டம்! மகிழ்ச்சியில் உலக திருநங்கைகள் -


பிரபஞ்ச அழகிப் போட்டியில் கலந்துகொண்ட 26 வயதான ஏஞ்சலா போன்ஸ், `மிஸ் யுனிவர்ஸ் ஸ்பெயின்' பட்டத்தை வென்று, பிரபஞ்ச அழகிப் போட்டியில் பங்குபெறும் முதல் திருநங்கை என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.

2012-ம் ஆண்டில் நடைபெற்ற உலக அழகிப் போட்டியில் கலந்துகொண்ட ஜென்னா டலாகோவா, `திருநங்கை' என்ற காரணத்துக்காகப்
போட்டியிலிருந்து விலக்கப்பட்டார். இதுதொடர்பாக வழக்கு தொடரப்பட்டதையடுத்து, திருநங்கைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது.
இந்நிலையில், 6 ஆண்டுகளுக்கு பிறகு பிரபஞ்ச அழகிப் போட்டிக்குத் தேர்வாகியிருப்பது ஸ்பெயின் அழகி ஏஞ்சலாதான்.

வெற்றி குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், சிறந்த பேச்சாளராக வேண்டும் என்பதே என் கனவு. அதன்மூலம் எங்கள் சமுதாயத்தைப் பற்றி மட்டும் அல்லாமல், ஒட்டுமொத்த உலகத்துக்கும் தனிமைப்படுத்துதலின் விளைவு, மரியாதையின் முக்கியத்துவம், பன்முகத்தன்மையின் ஆபத்து போன்றவற்றைப் பற்றி எடுத்துக்கூறி, விழிப்புஉணர்வு ஏற்படுத்துவேன்' எனப் பதிவுசெய்துள்ளார்.

வரலாற்றில் முதன்முறையாக `மிஸ் யுனிவர்ஸ்' பட்டத்துக்காக ஒரு திருநங்கை தேர்வாகியிருப்பது உலகளவில் திருநங்கைகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வரலாற்றில் முதல் முறையாக அழகி பட்டம்! மகிழ்ச்சியில் உலக திருநங்கைகள் - Reviewed by Author on July 06, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.